‘மியன்மார் ராணுவத் தலைவர் அழைக்கப்படவில்லை’

நோம்­பென்: மியன்­மார் ராணு­வத் தலை­வர் நவம்­ப­ரில் நடை­பெ­றும் வட்­டார உச்­ச­நிலை மாநாட்­டில் பங்­கேற்க அழைக்­கப்­ப­ட­வில்லை என்று மாநாட்டை நடத்­தும் கம்­போ­டியா நேற்று தெரி­வித்­தது.

மியன்­மார் ராணு­வத் தலை­வரை தனி­மைப்­ப­டுத்­தும் ஓர் அம்சமாக இந்த நட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

2021ஆம் ஆண்­டில் ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய பிறகு மியன்­மார் குழப்­பத்­துக்­குத் தீர்வு காண ஆசி­யான் தலை­மை­யில் அர­ச­தந்­திர முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டன.

ஆனால் ஆசி­யான் முன் மொழிந்த ஐந்து அம்ச திட்­டத்­தில் சிறி­து­கூட முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை.

இருந்­தா­லும் வரு­கின்ற ஆசி­யான் மாநாட்­டில் பங்­கேற்க அர­சி­யல் சார்­பற்ற பிர­தி­நி­தியை நிய­மிக்­கும்­படி கேட்­டுக்கொள்­ளப்­பட்­ட­தாக கம்­போ­டிய வெளி­யு­றவு அமைச்­சர் தெரி­வித்­தார்.

அதா­வது ராணு­வத் தலை­ வ­ருக்கு மாநாட்­டில் பங்­கேற்க அனு­ம­தி­யில்லை.

பிப்­ர­வரி முதல் ஆகஸ்ட் வரை­ நோம்­பென்­னில் இதர நாட்டு வெளி­யு­றவு அமைச்­சர்­க­ளை­யும் அவ­ரது தூதர்­க­ளை­யும் அவர் சந்­திக்க முடி­யாது.

மியன்­மார் ஆட்­சிக் கவிழ்ப்­புக்­குப் பிறகு குறைந்­தது நான்கு முறை ஆசி­யான் மற்­றும் அதன் தொடர்­பான சந்­திப்­பு­களில் பங்­கேற்க மியன்­மார் ராணு­வத் தலை­வ­ருக்குத் தடை விதிக்­கப்­பட்­டது.

அக்­டோ­பர் 2021ல் நடை­பெற்ற வட்­டார மாநா­டும், செப்­டம்­ப­ரில் வாஷிங்­ட­னில் நடை­பெற்ற அமெ­ரிக்க-ஆசி­யான் உச்­ச­நிலை மாநா­டும் அவற்­றில் அடங்­கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!