வேலைநிறுத்தத்திற்குத் தயாராகும் பிரிட்டிஷ் தாதியர்: வாக்கெடுப்பில் 300,000 பேர்

லண்­டன்: பிரிட்­ட­னின் ஆகப்­

பெ­ரிய தாதி­யர் சங்­கத்­தில் இடம்­பெற்­றுள்ள 300,000க்கும் மேற்­பட்டோர் சம்­பள உயர்வு கேட்­டு போரா­டுவ­தற்­கான வாக்­கெ­டுப்­பில் நேற்று கலந்­து­கொள்­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. சங்கத்தின் 106 ஆண்டு கால வரலாற்றில் இதுவே ஆகப்பெரிய வாக்­கெ­டுப்பு என்று கூறப்­ப­டு­கிறது.

அதி­க­ரித்து வரும் பண­வீக்­கத்­திற்கு ஈடாக சம்­ப­ளம் உயர்த்­தப்­பட வேண்­டும் என்­பது தாதி­ய­ரின் கோரிக்கை.

தாங்­கள் போராட வேண்­டிய கட்­டா­யத்­திற்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக ராயல் காலேஜ் ஆஃப் நர்­ஸிங் என்­னும் தாதி­யர் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

"எங்­க­ளுக்கு மதிப்­பில்லை, மரி­யாதை இல்லை, போது­மான ஊதி­ய­மும் இல்லை," என்று சங்­கத்­தின் பொதுச் செய­லா­ள­ரும் தலைமை நிர்­வா­கி­யு­மான பாட் கல்­லென் தெரி­வித்­துள்­ளார்.

வாழ்க்­கைச் செல­வி­னம் உயர்ந்து­ விட்­ட­தால் தத்­த­ளிக்­கும் தங்­க­ளது உறுப்­பி­னர்­கள் பண­வீக்­கத்­திற்­கும் மேலாக ஐந்து விழுக்­காட்டு சம்­பள உயர்வு பெற விரும்­பு­வ­தாக சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, வேலை­நி­றுத்­தம் செய்­தால் நோயா­ளி­க­ளின் நிலைமை என்­ன­வா­கும் என்­பதை தாதி­யர்­ யோசித்­து பார்ப்­பார்­கள் என்று தாம் நம்­பு­வ­தாக சுகா­தார, சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை பேச்­சா­ளர் ஒரு­வர் ஊடகங்களிடம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!