ராஜபக்சே சகோதரர்களிடம் விசாரணை நடத்த அனுமதி

கொழும்பு: முன்னாள் இலங்கை அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­வுக்­கும் அவ­ரது சகோ­தர­ரும் முன்­னைய பிர­த­ம­ரு­மான மகிந்த ராஜ­பக்­சே­வுக்­கும் எதி­ரான நீதி­மன்ற விசாரணை­யைத் தொடங்க அந்­நாட்டு உச்ச நீதி­மன்­றம் அனு­மதி வழங்­கி­யுள்ளது.

அந்த வழக்­கைத் தொடர்ந்த 'டிரான்ஸ்­ப­ரன்சி இண்­டர்­நே­ஷ­னல்' எனும் மனித உரிமைக் குழு இத்­

த­க­வலை நேற்று தெரி­வித்­தது.

இந்த இரு­வ­ரின் மற்­றொரு சகோ­த­ர­ரும் முன்­னாள் நிதி அமைச்­ச­ரு­மான பசில் ராஜ­பக்­சே­வும் மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர்­கள் இரு­வ­ரும் இந்த வழக்­கில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் அனை­வர் மீதும் வழக்கு விசா­ர­ணை­யைத்தொடங்க ஐந்து நீதி­ப­தி­கள் கொண்ட குழு அனு­மதி அளித்­துள்­ளது.

இலங்­கை­யில் கடந்த 70 ஆண்டு­ களில் இல்­லாத பொரு­ளி­யல் நெருக்­க­டிக்­குப் பொறுப்­பா­ன­வர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்று 'டிரான்ஸ்­ப­ரன்சி இன்­டர்­நே­ஷ­னல்' அமைப்பு முறை­யீடு செய்­தி­ருந்­தது.

வழக்­கில் எதிர்­வா­தி­க­ளா­கச் சேர்க்­கப்­பட்ட மூன்று ராஜ­பக்சே சகோ­த­ரர்­கள், முன்­னாள் அமைச்­சர்­கள், முக்­கிய அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ருக்கு வழங்­கப்­பட்ட அறிக்­கை­கள், பரிந்­து­ரை­கள், அவர்­க­ளு­ட­னான தொடர்­பு­கள் எல்­லா­வற்­றை­யும் நீதி­மன்­றத்­தில் ஒப்­ப­டைக்­கும்­படி உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. வழக்கு விசா­ரணை அடுத்த ஆண்டு ஜன­வரி 9ஆம் தேதி நடை­பெ­றக்­கூ­டும்.

இவ்­வே­ளை­யில், இலங்­கை­யில் போர்க்குற்­றங்­கள் நடந்­த­தற்­கான சான்­று­க­ளை­ சேக­ரித்­துப் பாது­காக்­கும் பணியை நீட்­டிப்பதற்கான தீர்­மா­னத்தை ஐக்­கிய நாட்டு அமைப்­பின் மனித உரி­மை­கள் மன்­றம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!