மலேசிய வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி உதவிகள்

கோலா­லம்­பூர்: விலை­வாசி உயர்வு மற்றும் பண­வீக்க அதி­க­ரிப்­பைச் சந்­தித்து வரும் மலே­சி­யா­வில் நேற்று இரண்­டா­வது பெரிய வர­வு­ செ­ல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­பட்­டது. கடந்த ஆண்டு 385.3 பில்­லி­யன் ரிங்­கிட் என்­னும் மலே­சிய வர­லாற்­றில் பெரிய தொகைக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது. நேற்­றைய, 2023 ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் 372.3 பில்­லி­ய­னுக்கு (US$80 பில்­லி­யன்) அர­சாங்­கத் திட்­டங்­கள் இடம்­பெற்­றன. 2023ல் நாட்­டின் பொரு­ளி­யல் வளர்ச்சி உலக மந்­தத்­திற்­கேற்ப 4 விழுக்­காடு முதல் 5 விழுக்­காடு வரை­யி­லேயே இருக்­கும் என்று வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யைத் தாக்­கல் செய்த நிதி அமைச்­சர் தெங்கு ஸாஃப்ருல் தெங்கு அப்­துல் அஸிஸ் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் குறை­வான மதிப்­பில் இவ்­வாண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டம் இடம்­பெற்­றா­லும் அறி­விக்­கப்­பட்­டுள்ள உத­வி­கள் முன்­ன­தைக் காட்­டி­லும் கிட்­டத்­தட்ட இரு­ம­டங்கு.

நடை­மு­றைச் செல­வி­னத்­தில் 5.2 விழுக்­காடு சமூக உத­வி­யா­க­வும் கட்­ட­ணச் சலு­கை­யா­க­வும் கடந்த ஆண்டு அறி­விக்­கப்­பட்ட நிலை­யில் இவ்­வாண்டு அது 11.3 விழுக்­காட்­டுக்கு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு உத­வி­கள் உயர்த்­தப்­பட்­டுள்­ளது பொதுத் தேர்­தல் முன்­கூட்­டியே வரு­வ­தற்­கான அறி­கு­றியை உணர்த்­து­வ­தாக அர­சியல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறுகின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!