ஈரான் அரசாங்கத் தொலைக்காட்சி ஊடுருவல்: உயர்மட்ட தலைவரைக் குறிவைப்பது போன்ற புகைப்படம்

ஈரானில் பெண்கள் வழிநடத்திவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இணைய ஆர்வலர்கள் அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சியை ஊடுருவியுள்ளனர்.

ஈரா­னின் உயர்­மட்ட தலை­வரான ஆய­துல்லா அலி காமே­னி­ தீயில் எரிவது போன்றும், அவர் முகத்தில் குறிசுடும் இலக்கு இருப்பது போன்றும் அவர் சித்திரிக்கப்பட்டார். காமே­னி­ உடனே நாட்டைவிட்டு வெளியேறும்படி அதில் எச்சரிக்கப்பட்டது.

சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு ஒளிபரப்பான செய்தி நிகழ்ச்சி ஊடுருவல் செய்யப்பட்டது. அது சில வினாடிகள் நீடித்ததாகக் கூறப்பட்டது.

ஈரான் தலைவர் புகைப்படத்தோடு, சர்ச்சைக்குரிய சூழலில் மரணமடைந்த மஹ்சா அமினி எனும் பெண் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்ட மூன்று பெண்கள் ஆகியோருடைய புகைப்படங்களும் ஒளிபரப்பட்டன.

“இளையர்களின் இரத்தம் உன் கையில் படிந்துள்ளது”, எனும் வாசகமும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் அந்தக் காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

இடலாட்-இ-அலி எனும் ஊடுருவல் குழு இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.

'ஹிஜாப்' எனும் தலையங்கியை சரியாக அணியாததாகச் சொல்லப்பட்ட அமினி எனும் 22 வயது பெண் ஈரானின் நன்னடத்தை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவர் மாண்டார். அவர் மரணத்தைத் தொடர்ந்து ஈரானின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!