மாணவர்கள் சாப்பிட்ட உணவில் நஞ்சு; 57 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

மெக்­சிகோ சிட்டி: மெக்­சி­கோ­வின் சியாப்­பாஸ் மாநில கிரா­மப் பகு­தி­யில் இருக்­கும் உயர்­நி­லைப்­பள்ளி ஒன்­றில் குறைந்­தது 57 மாண­வர்­கள் சாப்­பிட்ட உண­வில் நஞ்சு கலக்­கப்­பட்­ட­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். மாண­வர்­க­ளின் உண­வில் இத்­த­கைய நஞ்சு கலக்­கப்­பட்­டது என்­றும் அதை யார் கலந்­தார் என்­பது குறித்­தும் இன்­னும் தெரி­ய­வில்லை.

இது­கு­றித்து அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர். பாதிக்­கப்­பட்ட மாண­வர்­கள் அனை­வ­ரும் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். அங்கு அவர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

அவர்­களில் ஒரு­வ­ரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மற்­ற­வர்­க­ளின் உடல்­நிலை சீராக இருப்­ப­தாக மருத்­துவ அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். சியாப்­பாஸ் மாநி­லத்­தில் கடந்த இரண்டு வாரங்­களில் இது­போன்ற சம்­ப­வம் நிகழ்­வது இதுவே மூன்­றா­வது முறை­யா­கும். கெட்­டுப்­போன உணவு, அசுத்­த­மான தண்­ணீர் ஆகி­யவை மாண­வர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்­ட­தால் இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று பெற்­றோர் சிலர் கூறு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது. தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பால் பள்ளி அதி­கா­ரி­கள் மீது அவர்­கள் சினம் அடைந்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!