விளையாட்டுச் செய்திகள்

700வது கோல் போட்டு சாதனை படைத்த ரொனால்டோ

லிவர்பூல்: காற்பந்துச் சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது 700வது கோலைப் போட்டு சாதனை படைத்தார்.

நேற்று முன்தினம் எவர்ட்டனுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக அவர் களமிறங்கினார்.

ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் ரொனால்டோ அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. இதுவே யுனைடெட்டின் வெற்றி கோலாக அமைந்தது. அதுமட்டுமல்லாது, இப்பருவத்தில் ரொனோல்டோ போட்ட முதல் கோலாகும்.

எவர்ட்டனை 2-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் தோற்கடித்தது.

மீண்டு வருவோம்;

யர்கன் கிளோப் சூளுரை

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஆர்சனலிடம் 3-2 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோல்வியைத் தழுவியது.

ஆர்சனல் கோல்களைப் போட்டு முன்னிலை வகித்தபோதிலும் மனந்தளராது போராடிய லிவர்பூல் ஆட்டத்தை இருமுறை சமப்படுத்தியது.

இருப்பினும், தோல்வியின் பிடியிலிருந்து அக்குழுவால் தப்பிக்க முடியாமல் போனது.

இந்தத் தோல்வியின் மூலம் பட்டியலில் பத்தாவது இடத்தில் லிவர்பூல் இருக்கிறது.

ஆனால் இதுகுறித்து லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் கவலைப்படுவதாக இல்லை. இந்தப் பின்னடைவிலிருந்து லிவர்பூல் மீண்டு வரும் என்று அவர் தெரிவித்தார்.

ஃபுல்ஹம்மைப் போராடி வீழ்த்திய வெஸ்ட் ஹேம் குழு

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஃபுல்ஹம்மை 3-1 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் தோற்கடித்தது. இப்பருவத்தில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட் ஹேம் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை.

ஆட்டத்தின் முதல் கோலை ஃபுல்ஹம் போட்டு முன்னிலை வகித்தபோதிலும் நிதானத்தைக் கைவிடாமல் விளையாடிய வெஸ்ட் ஹேம் அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்டு வென்றது.

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

ராஞ்சி: இந்தியாவுக்கும் தென்னப்பிரிக்காவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்தடித்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அது 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ஓட்டங்களை எடுத்தது.

ஹென்ரிக்ஸ் 74 ஓட்டங்களிலும் மார்கிராம் 79 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். டேவிட் மில்லர் 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 279 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.

தவான் 13 ஓட்டங்களிலும் கில் 28 ஓட்டங்களிலும் நடையைக் கட்டினர். இஷான் கிஷன் 93 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நிதானமாகப் பந்தடித்த ஷ்ரேயஸ் ஐயர் சதமடித்து அசத்தினார். இது அவரது இரண்டாவது சதமாகும். இறுதியில், இந்திய அணி 45.5 ஓவர்களில் 282 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 113 ஓட்டங்களுடனும் சாம்சன் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!