‘சந்தேக நபர் நேன்சி பெலோசியின் முட்டிகளை உடைக்கத் திட்டமிட்டிருந்தார்’

சான் ஃபிரான்­சிஸ்கோ: அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் நேன்சி பெலோ­சி­யின் கண­வர் பால் பெலோ­சி­யைத் தாக்­கி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் ஆட­வர், திரு­வாட்டி பெலோ­சி­யைப் பிணை­பி­டிக்­கத் திட்­ட­மிட்­ட­தா­க நேற்று முன்­தினம் பதி­வு­செய்­யப்­பட்ட மத்­திய குற்­ற­வி­யல் புகா­ரில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது. அதோடு, சந்­தேக நப­ரின் கேள்­வி­க­ளுக்கு திரு­வாட்டி பெலோசி பொய்­யான பதில்­களை அளித்­ததால் அவ­ரின் முட்­டி­களை உடைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் புகா­ரில் தெரி­விக்­கப்­பட்டது.

சந்­தேக நப­ரான 42 வயது டேவிட் வெய்ன் டிப்பாப் மீது பிற­ரைத் தாக்­கி­யது, ஆள்­க­டத்­தல் முயற்சி ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்டுள்ளன. அப்­போது தாக்­கு­த­லுக்­குப் பின்­னால் சந்தேக நபரிடம் இருந்­தி­ருக்­கக்­கூ­டிய நோக்­கம் குறித்த தக­வல்­களும் வெளி­யா­யின. கொலை முயற்சி, மர­ணம் விளை­விக்­கக்­கூ­டிய ஆயு­தத்­தால் தாக்­கி­யது போன்­ற­வற்­றின் தொடர்­பி­லும் சந்­தேக நபர் மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று சான் ஃபிரான்­சிஸ்கோ நக­ரில் உள்ள பெலோசி தம்­ப­தி­யின் வீட்­டில் தாக்­கு­தல் மேற்­கொள்ளப்பட்டது. தாக்­கு­தல்­கா­ரர் திரு பால் பெலோசி­யின் தலையை சுத்­தி­ய­லால் தாக்­கி­னார்.

அப்­போது தாக்­கு­தல்­கா­ரர், "நேன்சி எங்கே?" என்று ஆங்­கி­லத்­தில் கேட்­டுக்­கொண்டே திரு­வாட்டி பெலோ­சி­யைத் தேடி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

மண்டை ஓட்­டில் எலும்பு முறிவு உள்­ளிட்ட காயங்­க­ளுக்கு ஆளான 82 வயது திரு பெலோசி அறுவை சிகிச்சை மேற்­கொண்­டார். அவர் முழு­மை­யாக குண­ம­டை­வார் என்று மருத்­து­வர்­கள் எதிர்­பார்ப்­ப­தாக திரு­வாட்டி பெலோ­சி­யின் அலு­வ­ல­கம் தெரி­வித்­தி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!