ரிங்கிட்டின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரியலாம்

கோலா­லம்­பூர்: அடுத்த ஆறு மாதங்­களில் அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ராக மலே­சிய ரிங்­கிட்­டின் மதிப்பு ஐந்து ரிங்­கிட்­டா­கப் பதி­வா­க­லாம் என கணிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு நேர்ந்­தால் ரிங்­கிட்­டின் மதிப்பு இது­வரை காணாத அளவு குறை­வாக இருக்­கும்.

டால­ரின் மதிப்பு மிக­வும் வலு­வாக உள்­ளது இதற்­குக் கார­ணம். மேலும், வட்டி விகி­தத்­தைப் பொறுத்­த­வரை அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் நிலைப்­பாடு, உல­க­ள­வில் தொட­ரும் நிலை­யற்ற தன்மை, மோச­மான பண­வீக்­கம் ஆகி­ய­வற்­றா­லும் இந்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.

சென்ற வாரம் புதன்­கி­ழ­மை­யன்று அமெ­ரிக்க மத்­திய வங்கி வட்டி விகித்தை மேலும் உயர்த்­தி­யது. அதோடு, எண்­ணெய் விலை­கள் குறைந்­தன. அதைத் தொடர்ந்து நேற்று டால­ருக்கு எதி­ரான ரிங்­கிட்­டின் மதிப்பு 4.73ஆகப் பதி­வா­னது. திங்­கட்­கி­ழ­மை­யன்று அதன் மதிப்பு 4.72ஆக இருந்­தது. அமெ­ரிக்க மத்­திய வங்கி இந்த வார­மும் வட்டி விகி­தத்தை உயர்த்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் வெள்­ளிக்கு எதி­ரான மலே­சிய ரிங்­கிட்­டின் மதிப்­பும் சற்று குறைந்து 3.35லிருந்து 3.45 ரிங்­கிட்­டுக்­குள் பதி­வா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ரிங்கிட் மேலும் நிலையற்றிருந்து சிங்கப்பூர் வெள்ளி தொடர்ந்து வலுவாக இருந்தால் இந்நிலை உருவாகும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!