மனவுறுதியுடன் விளையாடும் ஆர்சனல், திணறும் லிவர்பூல்

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் தொடர்ந்து சிறப்­பாக விளை­யா­டு­வது மட்­டு­மன்றி ஒரு பின்­ன­டை­வி­லி­ருந்து மீண்­டு­வ­ரக்­கூ­டிய ஆற்­ற­லை­யும் வெளிப்­ப­டுத்தி வந்­துள்­ளது ஆர்­ச­னல்.

ஒவ்­வொரு முறை­யும் தடு­மா­றிய பிறகு ஆர்­ச­னல் சரி­யத் தொடங்­கும் என்ற உணர்வு சில தரப்­பி­ன­ரி­டையே எழும். அதைப் பொய்ப்­பித்து வரு­கின்­ற­னர் நிர்­வாகி மிக்­கெல் அர்ட்­டெட்­டா­வின் வீரர்­கள்.

சவுத்­ஹேம்ப்­ட­னு­டன் சம­நிலை கண்ட மறு­வா­ரமே நாட்­டிங்­ஹம் ஃபாரஸ்ட்டை 5-0 எனும் கோல் கணக்­கில் நசுக்­கி­யது லீக் பட்­டி­ய­லில் முத­லி­டம் வகிக்­கும் ஆர்­ச­னல். முன்­ன­தாக மான்­செஸ்­டர் யுனை­டெட்­டி­டம் தோல்­வி­ய­டைந்த பிற­கும் நன்கு மீண்டு வந்­தது.

சுமா­ராக விளை­யா­டி­னா­லும் வெற்­றி­பெ­று­வ­தற்­குத் தேவை­யான அனைத்­தை­யும் செய்து வந்­துள்­ளது மான்­செஸ்­டர் யுனை­டெட். வெஸ்ட் ஹேம் யுனை­டெட்­டிற்கு எதி­ரான ஆட்­டத்­தில் கடைசி 15 நிமி­டங்­களில் சிர­மப்­பட்டு வென்­றது. யுனை­டெட்­டின் கோல் காப்­பா­ளர் டாவிட் ட கியா, தற்­காப்பு வீரர்­கள் லிசாண்ட்ரோ மார்ட்­டி­னெஸ், ஹேரி மெகு­வா­யர் ஆகி­யோர் சிறப்­பாக ஆடி­னர்.

எனி­னும், அதிக கோல்­கள் போட முடி­யா­மல் தவிக்­கிறது லீக் பட்­டி­ய­லில் ஐந்­தாம் இடத்­தில் உள்ள யுனை­டெட். இப்­பி­ரச்­சி­னையை சரி­செய்­யா­விட்­டால் அதுவே பெரும் இடை­யூ­றாக அமை­ய­லாம்.

லிவர்­பூல் ஒவ்­வொரு வார­மும் ஏமாற்­றத்­தைச் சந்­திக்­கிறது. வெல்­வது மட்­டு­மன்றி லீக் ஆட்­டங்­களில் சம­நி­லை­கூட காண­மு­டி­யாத நிலை­யில் உள்­ளது பட்­டி­ய­லில் ஒன்­ப­தா­வது இடத்­தில் திண­றும் லிவர்­பூல்.

நிர்­வாகி யர்­கன் கிளாப்­பின்­கீழ் கவர்ச்­சி­யாக ஆடும் குழு என்ற பெயரை லிவர்­பூல் பெற்­றுள்­ளது. இனி சில வாரங்­க­ளுக்கு அதை ஒதுக்­கி­விட்டு வெற்­றி­பெ­று­வ­தில் மட்­டும் கவ­னம் செலுத்தி விளை­யா­டு­வது நல்­லது.

தொடர் சரிவை எதிர்­கொண்­டு­வந்த டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் மீண்­டு­வ­ரும் அறி­கு­றி­கள் தென்­ப­டு­கின்­றன. பொர்ன்­மத்­துக்கு எதி­ரான ஆட்­டத்­தில் 2-0 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­ய­டைந்து கொண்­டி­ருந்­த­போ­தும் 3-2 எனும் கோல் கணக்­கில் வென்­றது. இது, லீக் பட்­டி­ய­லில் மூன்­றாம் இடத்­தில் இருக்­கும் ஸ்பர்ஸ் தன்­னம்­பிக்­கையை மீட்­டுக்­கொண்­ட­தற்­கான சான்று. இனி ஸ்பர்ஸ் தொடர்ந்து சில ஆட்­டங்­களில் வெல்­லக்­கூ­டும்.

புதிய நிர்­வாகி கிரா­ஹம் போட்­டருக்­குக்­கீழ் பல வாரங்­க­ளாக சிறப்­பாக விளை­யா­டி­வந்த செல்சி இப்­போ­து­தான் பின்­ன­டை­வைச் சந்திக்­கிறது.

போட்­டர் முன்பு நிர்­வா­கி­யாக இருந்த பிரைட்­ட­னி­டம் 4-1 எனும் கோல் கணக்­கில் படு­தோல்­வி­யடைந்­தது பட்­டி­ய­லில் ஆறாம் இடத்­தில் இருக்­கும் செல்சி. இந்­தப் பெரும் தடு­மாற்­றத்­தி­லி­ருந்து செல்சி மீண்­டு­வ­ரு­வ­தைப் பொறுத்தே போட்­ட­ரின் ஆற்­றல் கணிக்­கப்­படும்.

நட்­சத்­தி­ரம் எர்­லிங் ஹாலண்ட் இல்­லா­மல் தங்­க­ளால் சரி­யாக ஆட­மு­டி­யாது என்று கூறி­ய­வர்­க­ளின் வாயை அடைத்­தது பிரி­மி­யர் லீக் நடப்பு வெற்­றி­யா­ளர் குழு­வான மான்­செஸ்­டர் சிட்டி. குறிப்­பிட்ட வீரர்­களை மட்­டும் தாங்­கள் சார்ந்­தில்லை என்­பதை லெஸ்­டர் சிட்­டியை வென்­ற­தன் மூலம் மான்­செஸ்­டர் சிட்டி நிரூ­பித்­தது. காய­முற்ற ஹாலண்ட் அந்த ஆட்­டத்­தில் விளை­யா­ட­வில்லை.

எனி­னும், ஒரே கோலைப் போட்டு அந்த ஆட்­டத்­தில் வென்­ற­தைக் கருத்­தில்­கொண்டு கவ­ன­மாக இருக்­க­வேண்­டும் லீக் பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தில் இருக்­கும் மான்­செஸ்­டர் சிட்டி.

பரு­வத்தை சற்று மந்­த­மா­கத் தொடங்­கிய நியூ­கா­சல் யுனை­டெட் படிப்­ப­டி­யாக மேம்­பட்டு வரு­கிறது. விறு­வி­றுப்­பா­க­வும் தன்­னம்­பிக்­கை­யு­ட­னும் விளை­யா­டும் அக்­குழு பட்­டி­ய­லில் நான்­காம் இடத்­தில் உள்­ளது.

இதே போக்கு தொடர்ந்­தால் சில வாரங்­க­ளுக்­குப் பிறகு நியூ­கா­சல் லீக் கிண்­ணத்­துக்­குப் போட்டி தந்­தா­லும் ஆச்­ச­ரி­யப்படுவதற்கு இல்லை. அதே வேளை­யில், ஒரு கட்­டத்­தில் வெற்­றிப் பய­ணம் முடி­வுக்கு வர­வும் வாய்ப்­புண்டு.

தற்­போ­தைக்கு நியூ­கா­சல் ரசி­கர்­களை இன்ப அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளார் நிர்­வாகி எடி ஹாவ். ஸ்பர்சை வென்­ற­தோடு மான்­செஸ்­டர் சிட்­டி­யு­டன் சம­நிலை கண்ட நியூ­கா­சல் பெரிய குழுக்­க­ளை­யும் கையா­ளக்­கூ­டிய குழு.

இந்த லீக் பரு­வத்­தில் சில எதிர்­பாரா திருப்­பங்­கள் இடம்­பெ­ற­லாம். லிவர்­பூல் தடு­மா­று­வது, லீக் பட்­டி­ய­லில் ஃபுல்ஹம் ஏழாம் இடத்­தில் இருப்­பது ஆகி­யவை அதற்­கான அறி­கு­றி­கள்.

லீட்ஸ்

யுனைடெட்டிற்கு எதிரான லீக்

ஆட்டத்தில்

பந்துக்காகப்

போட்டியிடும்

லிவர்பூல் வீரர்

வெர்ஜில்

வேன் டைக்

(இடது).

படம்:

ராய்ட்டர்ஸ்

பிரசன்னா கிருஷ்ணன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!