கொவிட்-19 முடக்கத்தின்போது சிறுவன் உயிரிழப்பு; மன்னிப்புக் கூறிய அதிகாரிகள்

கார்பன் மோனாக்சைடு நச்சு வாயு காரணமாக மூன்று வயதுச் சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சீன அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளனர். அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

கொவிட்-19ஐ ஒழித்துக்கட்டுவதில் சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக வடமேற்குப் பகுதியில் உள்ள லான்ஸோவ் நகர் கிட்டத்தட்ட ஒருமாத காலமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பாளர்கள் பலரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

உள்ளூர் காவல்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சிறுவன் மரணமடைந்ததை உறுதிப்படுத்தினர். ஆனால், அவனுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது பற்றி அப்போது குறிப்பிடப்படவில்லை.

இதற்கிடையே, அச்சிறுவனின் தந்தை சமூக ஊடகத்தில் புதன்கிழமை பதிவு ஒன்றை வெளியிட்டார். தமது குடியிருப்புப் பேட்டையைவிட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டதாகவும் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் கழித்து, குடியிருப்பு வளாகத்தைவிட்டு ஒருவழியாக வெளியேறிய அவர், மருத்துவமனைக்குச் செல்ல டாக்சியைப் பிடித்தார். ஆனால், மகன் இறந்துவிட்டதாக பின்னர் உறுதி செய்யப்பட்டது என அவர் கூறினார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை சமூக ஊடகத்தில் விலாவாரியாக விளக்கினர். இறந்த சிறுவனின் உறவினர்களுக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை அவர்கள் தெரிவித்துக்கொண்டனர்.

“ஊடகம், இணையவாசிகளிடமிருந்து வரும் விமர்சனத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தவறுகளைச் சரிசெய்ய நாங்கள் தீர்மானத்துடன் உள்ளோம்,” என்று அதிகாரிகள் பதிவில் குறிப்பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!