இம்ரான் கானை நோக்கி துப்பாக்கிக்காரன் சுடுவதைக் காட்டும் காணொளி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நோக்கி துப்பாக்கிக்காரன் சுடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

துப்பாக்கிக்காரன் சுடத் தொடங்கிய தருணத்தைக் காட்டும் காணொளியை பாகிஸ்தானிய செய்தியாளர் இஹ்திஷாம் உல் ஹக் டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.

பேரணியின்போது ‘கன்டெய்னர் டிரக்’கில் திரு கான் நின்றுகொண்டிருந்தபோது, கீழே நின்றிருந்த துப்பாக்கிக்காரன் அவரை நோக்கிச் சுடத் தொடங்கினான். அவன் அருகே இருந்த ஒருவர் அவனைத் தடுத்து நிறுத்துவதையும் அந்தக் காணொளி காட்டியது. ஆனால், அவரது கையிலிருந்து நழுவி அந்தத் துப்பாக்கிக்காரன் ஓட்டம் பிடித்தான்.

துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்டு பதற்றமடைந்த மக்கள், நாலா திசைகளிலும் ஓடியதால் அங்கு ஒரே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

இந்நிலையில், துப்பாக்கிக்காரன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!