அவர் வந்தால் நான் வரமாட்டேன்: உக்ரேனிய அதிபர்

கியவ்: இந்­தோ­னீ­சி­யா­வில் இம்­மா­தம் நடை­பெற இருக்­கும் ஜி-20 மாநாட்­டில் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கலந்­து­கொண்­டால் உக்­ரேன் அந்த மாநாட்­டில் பங்­கேற்­காது என்று உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி அறி­வித்து உள்­ளார். கிரேக்க அதி­ப­ரின் உக்­ரே­னிய வரு­கை­யின்­போது நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் திரு ஸெலென்ஸ்கி இத­னைத் தெரி­வித்­தார்.

ஜி-20 உச்­ச­நிலை மாநாடு இம்­மா­தம் 15, 16 தேதி­களில் இந்­தோ­னீ­சி­யா­வின் பாலி தீவில் நடை­பெறு­கிறது. உக்­ரேன் மீதான படை­யெ­டுப்பு, அத­னால் ஏற்­பட்­டுள்ள உணவு, எரி­சக்தி நெருக்­கடி ஆகிய பிரச்­சி­னை­கள் மாநாட்­டில் முக்­கிய இடம்­பெ­றக்­கூ­டும் என்று ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

இதற்­கி­டையே, ரஷ்ய அதி­பர் புட்­டின் இந்த மாநாட்­டில் கலந்­து­கொள்­வது பற்றி இது­வரை முடி­வெ­டுக்­க­வில்லை என்­றும் கடைசி நேரத்­தில்­தான் அவ­ரது வருகை பற்றி தெரி­ய­வ­ரும் என்­றும் நேற்று இந்­தோ­னீசியா கூறி­யது.

தமது வருகை இன்­னும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை என்று திரு புட்­டின் தம்­மி­டம் தொலை­பேசி வழி கூறி­ய­தாக இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ தெரி­வித்­தார்.

அவ­ரது வரு­கைக்­காக இந்­தோ­னீ­சியா காத்­தி­ருப்­ப­தாக இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ரெட்னோ மர்­சுடி தெரி­வித்­தார். ஜி-20 அமைப்­புக்கு தற்­போது இந்­தோ­னீ­சியா தலைமை வகிக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!