கரிம வெளியேற்றம் இல்லாத 4 மி. கிலோ மீட்டர் பயணம்

இந்தோனீசியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் பயன்பாடு அதிகரிப்பு

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சியா, முதல் முறை­யாக மின்­சார மோட்­டார் சைக்­கிள் பயன்­பாட்­டின் மூலம் கரிம வெளி­யேற்­றம் இல்­லாத நான்கு மில்­லி­யன் கிலோ மீட்­டர் பய­ணங்­களை பதிவு செய்­துள்­ளது.

அண்­மை­யில் தொடங்­கப்­பட்ட முன்­னோடிக் கூட்டு முயற்­சி­யில் 200க்கும் மேற்­பட்ட மின்­சார மோட்­டார் சைக்­கிள்­கள் பிப்­ர­வரி முதல் அக்­டோ­பர் வரை­யில் ஜகார்த்­தா­வில் பய­ணி­களை ஏற்­றிச் செல்­ல­வும் உணவு விநி­யோ­கிக்­க­வும் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் ஆகப்­பெ­ரிய பொரு­ளி­யல் நாடான இந்­தோ­னீ­சி­யா­வில் மின்­சார வாக­னங்­க­ளுக்­கான கத­வு­கள் திறக்­கப்­பட்­டுள்ள வேளை­யில் இம்­மு­யற்சி இடம்­பெற்­றுள்­ளது.

அர­சாங்­கம் இதற்­கான விதி ­மு­றை­களை அறி­மு­கப்­ப­டுத்தி வரும் நிலை­யில் தனி­யார் நிறு­வ­னங்­கள் மின்­சார வாக­னங்­க­ளைத் தயா­ரிப்­ப­தில் முழு மூச்­சாக இறங்­கி­யுள்­ளன.

பொது போக்­கு­வ­ரத்­தில் மின்­சார வாக­னங்­கள் முக்­கிய இடம்­பி­டிக்­கும் என்று பாலி­யில் நடந்த நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அந்­நாட்­டின் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் புடி கார்யா சுமடி தெரி­வித்­தார்.

கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைக்க மாற்று எரி­பொ­ரு­ளில் அர­சாங்­கம் கவ­னம் செலுத்­து­ வதால் மின்­சார வாக­னங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

உணவு, பொருள் விநி­யோ­கச் சேவையை வழங்­கும் கோஜெக்­கும் எரி­பொ­ருள் நிறு­வ­ன­மான டிபி­எஸ் எனர்ஜி உத்­தா­மா­வும் இணைந்து ஜகார்த்­தா­வைத் தள­மா­கக் கொண்ட 'எலக்­டி­ரம்' கூட்டு முயற்­சியை உரு­வாக்­கி­யுள்­ளன.

சாலை­க­ளின் நிலை­மையை மின்­சார மோட்­டார் சைக்­கிள் சமா­ளிக்­கும் விதத்­தை­யும் ஓட்­டு­நர்­க­ளின் பாணி­யை­யும் எலக்­டி­ரம் ஆராய்ந்து வரு­கிறது. எட்டு மாத முன்­னோ­டித் திட்­டத்­தில் தர­வு­களும் போக்­கு­க­ளின் விவ­ரங்­களும் திரட்­டப்­பட்­டன.

இந்­தத் திட்­டத்­தில் பங்­கேற்ற ஓட்­டு­நர்­கள் நாளுக்கு 100 முதல் 120 கிலோ மீட்­டர் வரை வாக­னத்தை ஓட்­டி­னர் என்று கூட்டு முயற்­சி­யின் நிர்­வாக இயக்­கு­ந­ரான பேட்­ரிக் அதி­யட்­மட்ஜே தெரி­வித்­தார்.

ஒவ்­வொரு மில்­லி­யன் கிலோ மீட்­ட­ருக்கு கரிம வெளி­யேற்­றம் 85 டன்­னாக இருக்­கும். இந்த அடிப்­ப­டை­யில் 340 டன் கரிம வெளி­யேற்­றத்­தைத் தவிர்த்­துள்­ளோம் என்று பாலி­யில் நடந்த நிகழ்வு ஒன்­றில் அவர் சொன்­னார்.

இந்­நி­று­வ­னம், ஜி-20 உச்­ச­நிலை மாநாட்­டில் பங்­கேற்­கும் பேரா­ளர்­க­ளுக்­காக ஐம்­பது மின்­சார மோட்­டார் சைக்­கிள்­களை ஒதுக்­கி­யி­ருக்­கிறது. இவ்­வாண்­டின் ஜி-20 மாநாடு இந்­தோ­னீ­சி­யா­வின் தலை­மை­யில் நடை­பெ­று­கிறது.

நவம்­பர் 15, 16 தேதி­களில் நடை­பெ­றும் மாநாட்­டில் உல­கம் முழு­வ­தும் இருந்து 400க்கும் மேற்­பட்ட பேரா­ளர்­கள் கலந்­து­கொள்­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மாநாட்­டுக்கு முந்­திய சந்­திப்­பு­களில் நீடித்த மாற்று எரி­பொ­ருள், உல­க­ளா­விய சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு உள்­ளிட்ட விவ­கா­ரங்­கள் குறித்து விவா­திக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

2030ஆம் ஆண்­டுக்­குள் 13 மில்­லி­யன் மின்­சார மோட்­டார் சைக்­கிள்­க­ளை­யும் இரண்டு மில்­லி­யன் நான்கு சக்­கர மின்­சார வாக­னங்­கக­ளை­யும் பயன்­பாட்­டில் வைத்­தி­ருக்க இந்­தோ­னீ­சியா இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. இதற்காக பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!