சாதனை அளவில் ஆஸ்திரேலியாவுக்கு வெளிநாட்டு மாணவர்கள் படையெடுப்பு

சிட்னி: கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட்ட பிறகு ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சாதனை அள­வில் வெளி­நாட்டு மாண­வர்­கள் திரும்­பி­யுள்­ள­னர். பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மாண­வர் சேர்ப்­பும் சாதனை அளவு அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த ஆண்டு இறு­தி­யில் ஆஸ்­தி­ரே­லிய எல்­லை­கள் திறக்­கப்­பட்­டன. அப்­போ­தி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வரும் அனைத்­து­லக மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை 120,000லிருந்து 373,186க்கு அதி­க­ரித்­தது.

செப்­டம்­பர் மாதம் வரை­யி­லான மூன்று மாதங்­களில் மட்­டும் ஏறக்­கு­றைய 103,000 வெளி­நாட்டு மாண­வர்­கள் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் சேர விண்­ணப்­பித்­துள்­ள­னர்.

இவர்­க­ளின் வரவு, பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு வரு­வாயை வழங்கு ­வ­தோடு தேசிய அள­வி­லான தொழி­லா­ளர் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்ய உத­வு­கிறது.

இத­னால் மாண­வர்­களைக் கவ­ரும் வாய்ப்­பு­களை ஆஸ்­தி­ரே­லியா அறி­வித்து வரு­கிறது.

அண்­மைய அதி­கா­ரத்­துவ புள்ளி வி­வ­ரங்­க­ளின்­படி ஜூலை மாத நில­வ­ரப்­படி ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பல்­வேறு பல்­க­லைக்கழ­கங்­களில் 527,259 வெளிநாட்டு மாண­வர்­கள் படித்து வரு­கின்­ற­னர்.

இதில் சீன மாண­வர்­கள் முத­லி­டம் வகிக்­கின்­ற­னர். சுமார் 141,567 சீன மாண­வர்­களும் 86,782 இந்­திய மாண­வர்­களும் 51,579 நேப்­பாள மாண­வர்­களும் 19,932 மியன்­மார் மாண­வர்­களும் 14,865 இந்­தோ­னீ­சிய மாண­வர்­களும் 14,135 மலே­சிய மா­ண­வர்­களும் இங்கு படிக்­கின்­ற­னர். 5,897 சிங்­கப்­பூ­ரர்­கள் ஆஸ்­தி­ ரே­லி­யா­வில் படித்து வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!