பத்து தொகுதியிலிருந்து விலக தியான் சுவா மறுப்பு; சிக்கல்

கோலா­லம்­பூர்: கெஅ­டி­லான் கட்­சி­யின் அதி­கா­ர­பூர்வ வேட்­பா­ள­ரான பி. பிர­பா­க­ரனை எதிர்த்து அதே கட்­சி­யைச் சேர்ந்த தியான் சுவா சுயேட்­சை­யாக போட்­டி­யி­டு­வது பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணிக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கெஅ­டி­லான் கட்­சி­யின் முன்­னாள் உதவித் தலை­வ­ரான தியான் சுவா, தமது செய­லுக்­காக கட்சி எடுக்­கும் ஒழுங்கு நட­வ­டிக்­கைக்கு கட்­டுப்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

"எனது செய­லால் கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹி­முக்கு ஏற்­பட்­டுள்ள ஏமாற்­றத்தை நன்கு அறி­வேன். அதற்­காக நீண்­ட­கால நண்­ப­ரான அவ­ரி­டம் மன்­னிப்­புக்கேட்­டுக் கொள்­கி­றேன்," என்று அவர் கூறி­யுள்­ளார்.

தமது செயல் கட்­சிக்கு எதி­ராக இருந்­தா­லும் பத்து தொகு­தி­யில் தமது சேவை­யைத் தொடர அம்­மு­டிவை எடுத்­த­தா­க அவர் கூறி­னார்.

முன்­ன­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தியான் சுவா, பத்து தொகு­தி­யில் யாருக்கு ஆத­ரவு இருக்­கிறது என்­பதை நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். பிர­பா­க­ரன் வெற்றி பெற்­றால் அவ­ருக்கு ஆதரவு இருப்­ப­தா­கக் கரு­து­வேன் என்­றார்.

இதற்­கி­டையே பத்து தொகு­தி­யில் தியான் சுவா, தம்மை எதிர்த்து போட்­டி­யி­டு­வ­தால் மக்­க­ளுக்கு குறிப்­பாக பக்­கத்­தான் ஹரப்­பான் ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தும். அவ­ரது நட­வ­டிக்­கை­யால் பக்­கத்­தான் ஹரப்­பான் தோல்­வியை சந்­திக்­கும் சூழ்­நிலை இருப்­ப­தோடு தேசிய முன்­னணி வெற்றி பெறும் சாத்­தி­யமும் இருப்­ப­தாக தற்போதைய பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பிரா­ப­க­ரன் எச்சரித்து உள்ளார்.

"கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக தியான் சுவா எனக்கு நிறைய உதவிகளை செய்­துள்­ளார். அவரது செயல் ஏமாற்­ற­மாக இருக்­கிறது. அவரை எதி­ரி­யா­கக் கரு­த­வில்லை.தியான் சுவா தனது வேட்புமனுவை மீட்டுக்கொள்ள இன்னமும் நேரம் இருக்கிறது," என்­று பிர­பா­க­ரன் கூறி­யுள்­ளார். பத்து தொகுதியில் பிரபாகரன் உட்பட 10 பேர் போட்டி யிடுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!