ஜோகூரில் முன்னாள் பிரதமர் உட்பட முக்கிய புள்ளிகள் போட்டி

ஜோகூர் பாரு: முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசின் உட்­பட பல பிர­ப­லங்­கள் ஜோகூ­ரில் போட்­டி­யி­டு­ கின்­ற­னர்.

மொத்­தம் 26 நாடா­ளு­மன்ற இடங்­கள் உள்ள இந்த மாநி­லத்­தில் முன்­னாள் அமைச்­சர்­கள், மூத்த கட்­சித் தலை­வர்­கள் என பலர் களம் காண்கின்றனர்.

இத­னால் ஜோகூர், முக்கிய மாநி­ல­மாக பார்க்­கப்­ப­டு­கிறது. பிர­ப­லங்­கள் போட்­டி­யி­டு­வ­தால் தேர்­தல் முடி­வு­களும் ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பெரிக்­கத்­தான் நேஷ­ன­லைப் பிர­தி­நி­தித்து முகை­தீன், 75, தேர் ­த­லில் போட்­டி­யி­டு­கி­றார்.

ஆக இளை­ய­ராக, பக்­கத்­தான் ஹரப்­பான் வேட்­பா­ளர் ஃபடின் சுலைக்கா ஸைடி, 27, மெர்­சிங் தொகு­தி­யில் போட்­டி­யி­டு­கி­றார்.

பெர்­சத்­துக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான திரு முகை­தீன், 1986 மற்­றும் 1990ல் புக்­கிட் சிரம்­பாங் மாநி­லத் தொகு­தி­யில் போட்­டி­யிட்­ட­தைத் தவிர 1978ஆம் ஆண்­டி­லி­ருந்து பாகோ தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து வரு­கி­றார். 14வது பொதுத் தேர்­த­லில் அவர் பக்­கத்­தான் ஹரப்­பான் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு வெற்றி பெற்றார்.

மூத்த தற்­காப்பு அமைச்­சர் ஹிஷா­மு­தீன், செம்­பு­ரோங்­கி­லும் உயர் கல்வி அமைச்­சர் டாக்­டர் நூரை­ய்னி அஹ­மட், பாரிட் சுலோங்­கி­லும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் டாக்­டர் வீ க சியோங், ஆயர் ஹித்­தாம் தொகு­தி­யி­லும் போட்­டி­யி­டு­கின்­ற­னர். இரண்டு முன்­னாள் முதல்­வர்­களும் இம்­மா­நி­லத்­தில் போட்­டி­யிடு­கின்­ற­னர். ஹஸ்னி முஹ­மட், சிம்­பாங் ரெங்­காங்­கி­லும் முஹ­மட் காலித் நூர்­தின், கோத்த திங்­கி­யி­லும் போட்டி போடு­கின்­ற­னர்.

மலே­சிய ஐக்­கிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி­யின் தலை­வரான சையது சாதிக் சையது அப்­துல் ரஹ்­மான் மூவா­ரில் போட்­டி­யி­டு­கி­றார்.

அமா­னா­வின் துணைத் தலை­வர் சலா­ஹு­தின் அயுப், புலா­யில் கள­மி­றங்­கி­யுள்­ளார்.

தேசிய முன்­னணி, ஜோகூ­ரில் உள்ள 26 தொகு­தி­க­ளி­லும் வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யுள்­ளது.

இதற்கு அடுத்­த­தாக பக்­கத்­தான் ஹரப்­பான் 24 இடங்­களில் போட்டி­ யி­டு­கிறது. லெடாங் நாடா­ளு­மன்­றத் தொகுதி­யில் ஆக அதி­க­மாக ஆறு பேர் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

தற்­போ­தைய உறுப்­பி­ன­ரான ஜோகூ­ரின் 'பிகே­ஆர்' துணைத் தலை­வர் சையது இப்­ரா­ஹிம் சையது நோஹாவை எதிர்த்து முன்­னாள் துணை அமைச்­ச­ரும் தேசிய முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ரு­மான டாக்­டர் ஹிமிம் சமுரி மற்றும் ரஃபிடா ரிட்­வான், ஸைனி அப்­துல் மஜித், இரண்டு சுயேட்சை வேட்­பா­ளர்­கள் யூனுஸ் மஸ்­தா­கிம், ஸைனல் பஹ்­ரோம் ஏ. காதிர் ஆகி­யோர் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

மொத்­தம் 13 தொகு­தி­களில் மும்­மு­னைப் போட்­டி­யும் 9 இடங்­களில் நான்கு முனைப் போட்­டி­யும் 3 இடங்­களில் ஐந்து முனைப் போட்­டி­யும் நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!