மகாதீருக்கு நிச்சயமில்லாத லங்காவி தொகுதி

லங்­காவி: மலே­சி­யா­வின் எதிர்­வரும் பொதுத் தேர்­தல், முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­ம­துக்கு இறுதித் தேர்தலாக இருக்­கக்­கூ­டும்.

இத்­தேர்­தலே அவ­ருக்கு ஆகக் கடி­ன­மான ஒன்­றாக இருக்­கக்­கூ­டும். லங்­காவி தொகு­தி­யில் டாக்­டர் மகா­தீர், 97, ஐந்து முனைப் போட்­டியை எதிர்­கொள்­கி­றார். லங்­கா­வி­யில் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை வீழ்ச்­சி­ய­டைந்து இருப்­பது, பலரை விரக்­தி­யில் ஆழ்த்­தி­யுள்ள சம­யத்­தில் அங்கு தேர்­தல் நடை­பெறு­கிறது.

எனவே, இத்­தேர்­த­லில் தம்மை எதிர்த்­துப் போட்­டி­யி­டும் இளம் வேட்­பா­ளர்­க­ளி­டம் டாக்­டர் மகாதீர் லங்­காவி தொகு­தியை இழக்­கக்­கூ­டும்.

2018 பொதுத் தேர்­த­லில் லங்­காவி தொகு­தியை வென்ற டாக்டர் மகா­தீர், இரண்­டாம் தவணைக்கு அதைத் தக்­க­வைக்க முனை­கி­றார்.

லங்­காவி தொகு­தி­யில் ஐந்து வேட்­பா­ளர்­கள் போட்­டி­யி­டு­வது இதுவே முதன்­முறை.

முதிர்ந்த வய­தி­லும் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­கான கார­ணம் குறித்து டாக்­டர் மகா­தீ­ரி­டம் கேட்கப்­பட்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்த டாக்டர் மகாதீர், பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யில் தமது இடத்தை இழந்து, பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து தாம் வில­கி­ய­தைத் தொடர்ந்து, நிறைவு செய்­யப்­ப­டாத வேலையை முடிக்க தாம் விரும்­பு­வ­தா­கக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!