பேய்விழா விபத்துக்கு மன்னிப்பு கேட்ட தென்கொரிய அதிபர்

சோல்: தென்­கொ­ரி­யத் தலை­ந­கர் சோலில் அண்­மை­யில் நடந்த பேய்­வி­ழா­வில் கூட்ட நெரி­ச­லில் சிக்கி ஏற்­பட்ட உயிர்ச்­சே­தத்­துக்­காக தென்­கொ­ரிய அதி­பர் யூன் சுக் யோல், நேற்று மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டார்.

இந்த அசம்­பா­வி­தத்­திற்கு கார­ண­மான அதி­கா­ரி­களை பொறுப்­பேற்க வைக்­க­வும் காவல்­துறை மற்­றும் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றையை சீர­மைக்­க­வும் உறு­தி­ அளித்­துள்­ளார் அவர்.

அக்­டோ­பர் 29ஆம் தேதி சோலின் இட்­ட­வோன் மாவட்­டத்­தில் நடந்த பேய்­வி­ழா­வின்­போது கூட்ட நெரி­ச­லில் சிக்கி 156 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்த அசம்­பா­வி­தத்­தில் 197 பேருக்கு காயம் ஏற்­பட்­டது. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்­கும் தனது இரங்­கலை தெரி­வித்­துக்­கொண்டார் அதி­பர் யூன்.

கூட்ட நெரி­ச­லைப் பற்றி புகார் கொடுக்க பலர் காவல்­து­றையை தொடர்­பு­கொண்­ட­னர் என்று கடந்த வாரம் நடந்த விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. ஆனால், அதி­காரி­கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றும் தெரி­ய­வந்தது.

இந்த விபத்தை பொறுப்­பு­டன் கையா­ள­வில்லை என்று அதி­பர் யூன் காவல்­து­றையை வன்­மை­யாக கண்­டித்­தார்.

இதைப்­போன்ற அசம்­பா­வி­தங்­களை தடுக்­க­வும் மக்­க­ளைப் பாது­காக்­க­வும் காவல்­து­றை­யின் செயல்­பா­டு­களை சீர­மைக்க வேண்­டும் என்று அதி­பர் யூன் சொன்­னர்.

பேய்­வி­ழா­வுக்கு அனுப்­பப்­பட்ட 137 அதி­கா­ரி­கள் போது­மா­ன­தாக இருந்­தி­ருக்­க­வேண்­டும்.

ஆனால், ஒடுக்கமான சந்­து­களில் கூட்ட நெரி­சலை எதிர்­பார்க்­க­வில்லை என்று தேசிய காவல்­துறை தலைமை அதி­கா­ரி­யான யூன் ஹீ கியூன் நாடாளு­மன்­றத்­தில் கூறி­னார்.

நூறா­யி­ரத்­திற்கு மேற்­பட்­டோர் கலந்­து­கொண்ட இவ்­வி­ழா­வில் 137 அதி­கா­ரி­களை மட்­டும் அனுப்­பி­ய­தற்­காக பொது­மக்­கள் காவல்­துறையைக் கடுமையாக விமர்­சிக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!