வெப்பத்தால் ஐரோப்பாவில் 15,000 மரணங்கள்

கோப்­பன்­ஹே­கன்: ஐரோப்­பா­வில் அதிக வெப்­பத்­தின் கார­ண­மாக இவ்­வாண்டு குறைந்­தது 15,000 பேர் மாண்­டு­விட்­ட­னர் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. ஸ்பெ­யின், ஜெர்­மனி உள்­ளிட்ட நாடு­கள் ஆக அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டவை.

இவ்­வாண்டு ஜூன் மாதத்­துக்­குள் ஆகஸ்ட் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் ஐரோப்­பா­வில் வர­லாறு காணாத அள­வில் அதிகமாக வெப்­ப­நிலை பதி­வா­னது. ஆதி காலத்­திற்­குப் பிறகு ஆக மோச­மான வறட்­சியை இம்­மா­நி­லம் எதிர்­கொள்ள நேரிட்­டது.

இந்த கால­கட்­டத்­தில் அதிக வெப்­பத்­தால் ஸ்பெ­யி­னில் கிட்­டத்­தட்ட 4,000 பேரும் போர்ச்­சு­க­லில் 1,000க்கு அதி­க­மா­னோ­ரும் மாண்­ட­னர். பிரிட்­ட­னில் 3,200க்கும் மேலா­னோர் மர­ண­ம­டைந்­த­னர், ஜெர்­ம­னி­யில் மரண எண்­ணிக்கை சுமார் 4,500ஆகப் பதி­வா­னது.

மேலும், ஆண்­டு­தோ­றும் அக்­டோ­பர் மாதத்­தில் இது­வரை காணாத அள­வில் சென்ற மாதம் ஐரோப்­பா­வில் வெப்­ப­நிலை அதி­க­மா­கப் பதி­வா­ன­தா­க­வும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் 'சி3எஸ்' எனும் பரு­வ­நிலை மாற்­றப் பிரிவு தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, பரு­வ­நிலை மாற்­றத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய மோச­மான இயற்­கைப் பேரி­டர்­களை முன்­கூட்டியே தெரி­யப்­ப­டுத்­தும் முறையை உரு­வாக்­கு­வ­தற்­கான ஐந்­தாண்டுத் திட்­டத்தை ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்­ளது. அத்­திட்­டத்­தின் மதிப்பு சுமார் 3.1 பில்­லி­யன் டாலர் (4.3 பில்­லி­யன் வெள்ளி).

அப்­ப­டி­யென்­றால் ஒரு­வ­ருக்கு 50 அமெ­ரிக்க காசு என்று பொருள் என்­று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் தலை­வர் அன்­டோ­னியோ குட்­டே­ரெஸ் குறிப்பிட்டார். ஆயி­ரக்­கணக்­கான உயிர்­க­ளைப் பாது­காக்க இது ஒரு சிறிய தொகை என்பதை அவர் சுட்டினார்.

எகிப்­தில் நடை­பெ­றும் 'கோப்27' பரு­வ­நிலை மாநாட்­டில் திரு குட்­டரெஸ் பேசி­னார். ஆக அதி­க­மா­கப் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­யோரை முக்­கி­ய­மா­கக் கருத்­தில்­கொண்டு அனை­வ­ரை­யும் பாது­காக்­கும் நோக்­கு­டன் ஐந்­தாண்­டு­க­ளுக்­குள் பேரி­டர் முன்­னெச்­ச­ரிக்கை முறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக திரு குட்டரெஸ் மாநாட்டில் உலகத் தலைவர்களிடம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!