பாகிஸ்தானில் இந்தியக் குடும்பத்துக்கு கிடைத்த உபசரிப்பு (காணொளி)

ஒவ்வொருவரும் வெளிநாட்டிற்குச் செல்லும்போது, புதிய சூழலில் ஒருவித அமைதியற்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். ஆனால், அந்த நாட்டு மக்களின் அன்பான வரவேற்பும் கவனிப்பும் உதவியும் கிடைக்கும்போது மனம் அமைதியாகி மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வரவேற்க ஆயத்தமாகிவிடும்.

தங்கள் மகளின் டென்னிஸ் போட்டிக்காக பாகிஸ்தானுக்குச் சென்ற இந்தியக் குடும்பம், அங்கு ஒரு பாகிஸ்தானியரிடம் வாகனத்தில் ‘லிஃப்ட்’ கேட்டனர். அந்த பாகிஸ்தான் உள்ளூர்வாசி அந்த இந்தியக் குடும்பத்துக்கு உதவ முன்வந்தார். அவர் செய்த நெகிழ வைக்கும் சம்பவத்தைப் பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து பாகிஸ்தான் சென்ற அந்தக் குடும்பத்திற்கு உதவியவர் தாஹிர் கான்.

இஸ்லாமாபாத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் பார்ப்பதற்காக இந்தியக் குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு வந்திருப்பதை அறிந்த தாஹிர், அவர்கள் தமது அலுவலகத்திற்கு வந்து தம்முடன் சேர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று விரும்பினார்.

அந்தக் குடும்பம் தாஹிருடன் ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுவதையும் அண்டை நாட்டில் தங்களின் இனிமையான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதையும் காணொளி காட்டியது.

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறித்து ஜாலியான விவாதத்துடன் இந்த விருந்தோமல் நடைப்பெற்றது. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், "ஆப் விராத் கோஹ்லி ஹுமைன் டி டோ, ஆப் டிராபி லேகர் ஜெய்யின் (விராத் கோஹ்லியை எங்களுக்குக் கொடுங்கள், நீங்கள் கிண்ணத்தை எடுத்துக்கொள்ளலாம்),” என்று நகைச்சுவையுடன் காணொளியில் கூறுகிறார்.

அந்த இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, இதுபோன்ற மனமார்ந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்றும் பாகிஸ்தான் மக்களின் விருந்தோம்பலை விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காணொளி பரவலானதை தொடர்ந்து, "இருதரப்பிலும் உள்ளவர்கள் எப்போதும் நல்லவர்கள். அரசியல்தான் மக்களைத் தள்ளிவைக்கிறது,” என்று சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!