கொவிட்-19 பரவல்: சீனத் தலைநகரில் ஐந்து மாத உச்சம்

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது. கொவிட்-19 தொற்றியோர் தனிமைப்படுத்துமிடங்களுக்கு வெளியிலும் கிருமிப் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிகாரிகளுக்குக் கவலை அளித்துள்ளது. பெய்ஜிங்கில் நேற்று புதிதாக 78 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த மே 22ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் பதிவான ஆக அதிக பாதிப்பு இதுதான். இதனிடையே, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதிக்குப் பிறகு ஆக அதிகமாக சீனாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 7,740 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. குவாங்ஸோ நகரமே ஆக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேலும் 2,637 பேர் தொற்றுக்கு ஆளாயினர். இதனையடுத்து, அந்நகரில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!