கிள்ளானில் திடீர் வெள்ளம்; நான்கு மாநிலங்களுக்குத் தயார்நிலை உத்தரவு

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­தல் நெருங்­கும் வேளை­யில் சிலாங்­கூ­ரின் கிள்­ளான் நக­ரில் நேற்று முன்­தி­னம் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது.

கன­மழை கார­ண­மாக கிள்­ளா­னில் உள்ள பல பகு­தி­களில் வெள்­ளம் கரை­பு­ரண்­டோ­டியது.

கிள்­ளானை நோக்­கிச் செல்­லும் ஷா அலாம் விரைவுச்­சா­லை­யின் ஒரு பகு­தி­ வெள்ள நீரில் மூழ்­கி­யது. பாஹாங், சிலாங்­கூர், ஜோகூர், சர­வாக் ஆகிய மாநி­லங்­களில் வெள்­ளத் தயார்­நிலை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கிடையே, சிலாங்கூரில் மேலும் பல பகுதிகளில் நேற்று மாலை வெள்ளம் ஏற்பட்டது.

நிலைமை மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மலே­சி­யா­வில் தற்­போது பரு­வ­ம­ழைக்­கா­லம் நில­வு­கிறது. இக்­கா­ல­கட்­டத்­தில் நவம்­பர், டிசம்­பர் மாதங்­களில் மலே­சி­யா­வின் கிழக்கு மாநி­லங்­களில் கன­மழை பெய்து வெள்­ளம் ஏற்­ப­டு­வது வழக்­கம். ஜோகூர் மாநி­லத்­தின் கிழக்­குப் பகுதி, பாஹாங், திரங்­கானு, கிளந்­தான் ஆகிய மாநி­லங்­களில் வெள்­ளம் ஏற்­ப­டு­வ­துண்டு. இதைக் கருத்­தில் கொண்டு தேர்­த­லைப் பரு­வ­ம­ழைக்­கா­லத்­தில் நடத்­தக்­கூ­டாது என்று எதிர்க்­கட்­சி­கள் அதி­ருப்தி தெரி­வித்­தி­ருந்­த­ன. தேர்­தல் இம்­மா­தம் 19ஆம் தேதி நடை­பெ­று­கிறது.

வெள்­ளம் ஏற்­பட்­டால் பல­ரால் வாக்­க­ளிப்பு மையங்­க­ளுக்­குச் சென்று வாக்­க­ளிக்க முடி­யாது என்று அவை கூறு­கின்­ற­ன.

இருப்பினும், மலேசியாவில் முன்பு பருவமழைக்காலத்தின்போது தேர்தல் நடத்தப்பட்டிருப்பதாக அம்னோ கட்சி வாதிடுகிறது. மேலும் வெள்ளம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார்நிலையில் இருப்பதாக அது தெரிவித்தது.

அம்னோவின் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசு பருவமழைக்காலத்தில் தேர்தலை அறிவித்திருப்பது பொறுப்பற்ற செயல் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, மலேசியர்கள் பலரும் குறைகூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!