அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கை

சோல்: அமெ­ரிக்கா தனது நட்பு நாடு­க­ளு­டன் இந்த வட்­டா­ரத்­தில் தனது பாது­காப்பை மேம்­ப­டுத்­தும் வித­மாக முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ள வேளை­யில், இது தொடர்­பாக தான் மேலும் கடு­மை­யான பதி­லடி கொடுக்­கப்­போ­வ­தாக எச்­ச­ரித்­துள்ள வட­கொ­ரியா, நேற்று ஏவு­கணை ஒன்­றைப் பாய்ச்­சி­யது.

வட­கொ­ரியா இந்த ஆண்டு இது­போன்ற சோத­னை­களை செய்­துள்­ளது. மேலும், அண்­மை­யில் தென்­கொ­ரி­யா­வும் அமெ­ரிக்­கா­வும் நடத்­திய ராணுவ பயிற்­சி­களை எதிர்த்து, வட­கொ­ரியா நூற்­றுக்­க­ணக்­கான பீரங்கி குண்­டு­களை கட­லில் வீசி­யது.

இந்த ராணுவ பயிற்­சி­களில் சில ஜப்­பான் நாடும் பங்­கேற்­றது.

வட­கொ­ரி­யா­வின் கிழக்கு கடற்­கரை நக­ர­மான வொன்­சா­னில் இருந்து உள்­ளூர் நேரப்­படி காலை 10.48 மணிக்கு 240 கிமீ தூரத்­தில் இருந்து 47 கிமீ உய­ரத்­திற்கு மேக் 4 வேகத்­தில் ஏவு­கணை பாய்ச்­சப்­பட்­ட­தாக தென்­கொ­ரிய ராணு­வம் தெரி­வித்­துள்­ளது.

ஏவு­க­ணையை பாய்ச்­சு­தற்கு சில மணி நேரம் முன்­ன­தாக வட கொரியா கடு­மை­யான ராணுவ பதி­லடி தரப்­போ­வ­தாக அமெ­ரிக்கா, அதன் வட்­டார நட்பு நாடு­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது.

அமெ­ரிக்கா, அதன் வட்­டார நட்பு நாடு­க­ளின் கூட்டு ராணுவ பயிற்­சிக்கு பதி­லடி கொடுக்­கும் வகை­யில் அதன் ராணு­வம் மேலும் நட­வ­டிக்கை எடுக்­கும் என்று பியோங்­யாங் கூறி­யது.

வட­கொ­ரிய வெளி­யு­றவு அமைச்­ச­ரான சோ சோன் ஹுய், அமெ­ரிக்கா, தென்­கொ­ரியா மற்­றும் ஜப்­பான் இடையே நடந்த முத்­த­ரப்பு மாநாட்டை கடு­மை­யாக விமர்­சித்­தார். மாநாட்­டில் பங்­கேற்ற நாடு­க­ளின் தலை­வர்­கள் பியோங்­யாங்­கின் ஆயுத சோத­னை­களை விமர்­சித்­த­தோடு தங்­கள் நாடு­க­ளி­டையே அதிக பாது­காப்பு ஒத்­து­ழைப்பு இருக்­கும் என்­றும் உறு­தி­ய­ளித்­த­னர்.

"மூன்று நாடு­க­ளின் கூட்டு ராணு­வப் பயிற்­சி­கள் வட­கொ­ரி­யாவை கட்­டுப்­ப­டுத்­தத் தவ­றி­விட்­டன" என்று சோ கூறி­னார்.

மாறாக அவர்­க­ளின் சொந்த நாடு­க­ளுக்­கான பாது­காப்பு நெருக்­க­டியை மோச­மாக்­கி­யுள்­ளது என்­றும் சோ கூறி­னார்.

மேலும், இது­போன்ற நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்­தால் கடு­மை­யான எதிர்­வி­ளை­வு­களை சந்­திக்க நேரும் என்று சோ எச்­ச­ரித்­தார்.

அமெ­ரிக்கா அதன் செயல்­க­ளுக்கு நிச்­ச­யம் வருந்­தும் என்று அவர் சொன்­ன­தாக, கொரிய மத்­திய செய்தி நிறு­வ­னத்­தின் அறிக்கை தெரி­விக்­கிறது. அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், அணு ஆயு­தங்­கள் உட்­பட அனைத்து ஆத­ர­வை­யும் தான் வழங்க உறு­தி­பூண்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

ஜப்பான் கடற்பகுதியில் ஏவுகணை பாய்ச்சிய வடகொரியா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!