மியன்­மார்: வெளி­நாட்­ட­வர் நால்­வர் உள்­பட 700 கைதிக­ள் விடு­விப்பு

யங்­கூன்: மியன்­மா­ரில் நான்கு வெளி­நாட்­ட­வர் உட்­பட 700 கைதி­கள் விடு­விக்­கப்­பட உள்­ள­னர்.

அவர்­கள் அனை­வ­ரும் பொது மன்­னிப்­பின்­கீழ் விடு­வி­டுக்­கப்­ப­டு­வர் என்று அந்­நாட்­டின் ராணுவ ஆட்­சி­மன்­றக் குழு தெரி­வித்­தது.

மியன்­மா­ரின் தேசிய தினத்தை முன்­னிட்டு அவர்­கள் விடு­விக்­கப்­ப­டு­வர் என்று மியன்­மார் நாட்டு மூத்த அதி­காரி ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

முன்­ன­தாக, 'மியன்­மார் நவ்' என்ற சுயேச்­சை­யான செய்தி நிறு­வ­னத் தக­வ­லின்­படி, 6,000 கைதி­கள் விடு­விக்­கப்­ப­டு­வர் என்று கூறப்­பட்­டது.

விடு­விக்­கப்­படும் நான்கு வெளி­நாட்­ட­வர்­களில் ஆஸ்­தி­ரே­லிய பொரு­ளா­தார நிபு­ணர் ஷான் டர்­னெல், முன்­னாள் பிரிட்­டிஷ் தூதர் விக்கி போமன், ஜப்­பா­னிய ஆவ­ணப்­பட தயா­ரிப்­பா­ளர் டோரு குபோடா ஆகி­யோர் அடங்­கு­வர்.

2002 முதல் 2006 வரை தூத­ரா­கப் பணி­யாற்­றிய போமன், தனது வெளி­நாட்­ட­வர் பதி­வுச் சான்­றி­த­ழில் குறிப்­பிட்­டுள்ள முக­வ­ரி­யி­லி­ருந்து வேறு முக­வ­ரி­யில் வசிப்­பதை அதி­கா­ரி­க­ளி­டம் அறி­விக்­கத் தவ­றி­ய­தற்­காக ஆகஸ்ட் மாதம் தம் கண­வ­ரு­டன் தடுத்து வைக்­கப்­பட்­டார்.

இரு­வ­ருக்­கும் ஓர் ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. பிர­பல வரை­ப­டக் கலை­ஞ­ரான போம­னின் கண­வர், டெய்ன் லின்­னும், போம­னும் விடு­விக்­கப்­ப­டு­வர் என்று மூத்த அதி­காரி கூறி­யுள்­ளார்.

மியன்­மா­ரின் முன்­னாள் ஆட்­சி­யா­ளர் ஆங் சான் சூச்­சி­யின் ஆலோ­ச­க­ராக டர்­னெல் பணி­பு­ரிந்­தார். கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் நடந்த ஆட்­சிக்­க­விழ்ப்­புக்­குப் பின்­னர், அவர் தடுத்து வைக்­கப்­பட்­டார். செப்­டம்­ப­ரில், அர­சாங்க ரக­சிய சட்­டத்தை மீறி­ய­தற்­காக ராணுவ ஆட்­சி­மன்­றக் குழு அவ­ருக்­கும் சூச்­சிக்­கும் தலா மூன்று ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதித்­தது.

குபோடா சீர்­கு­லை­வுச் சட்­டம், குடி­யேற்­றம் தொடர்­பான சட்­டங்­களை மீறிய குற்­றச்­சாட்­டு­க­ளின் கீழ் இந்த ஆண்டு தொடக்­கத்­தில் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். மியன்­மார் நக­ரான யங்­கூ­னில் ஜூலை மாதம் நடந்த போராட்­டத்­தில் அவர் கைது செய்­யப்­பட்­டார். கடந்த மாதம், அவ­ருக்கு மொத்­தம் 10 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!