வன்முறையைத் தடுக்க மலேசியாவில் விழிப்புநிலை

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் தொங்கு நாடா­ளு­மன்­றம் ஏற்­பட்டு அர­சாங்­கம் அமைப்­ப­தில் இழு­பறி ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து சமூக ஊட­கம் வாயி­லாக இனக் கல­

வ­ரத்­தைத் தூண்­டும் காணொ­ளி­கள் வெளி­யி­டப்­படும் அபா­யம் இருப்­ப­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர். இதை எதிர்­கொள்ள மலே­சிய அதி­கா­ரி­கள் தகுந்த நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றனர்.

இந்­நி­லை­யில், உச்ச விழிப்­பு­

நி­லை­யில் இருப்­ப­தாக டிக்­டாக் சமூக ஊட­கத் தளம் தெரி­வித்­துள்­ளது. வழி­காட்டி நெறி­மு­றை­யைக் கடைப்­பி­டிக்­கா­த, வன்­

மு­றை­யைத் தூண்­டும் காணொ­ளி­களை உடனே முடக்க தயா­ராக இருப்­ப­தாக அது கூறி­யது.

"தொடர்ந்து உச்ச விழிப்­பு­நி­லை­யில் இருப்­போம். விதி­மு­றை­களை மீறும் காணொ­ளி­களை உட­ன­­டி­யாக நீக்­கு­வோம்," என்று டிக்­டாக் கூறி­யது.

மலே­சி­யப் பொதுத் தேர்­தலை முன்­னிட்டு பிர­சா­ரக்­கூட்­டங்­கள் நடை­பெற்­ற­போது இனக் கல­

வ­ரத்­தைத் தூண்­டும் வகை­யில் பல காணொ­ளி­கள் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவை குறித்து மலே­சிய அதி­கா­ரி­க­ளி­டம் உட­ன­டி­யா­கத் தெரி­வித்­த­தா­க­வும் டிக்­டாக் கூறி­யது.

தேர்­த­லில் 73 தொகு­தி­களை வென்று ஆட்சி செய்­யும் வேட்­கை­யில் இருக்­கிறது பெரிக்­காத்­தான் நேஷ­னல். இக்­கூட்­ட­ணி­யில் பெரும்­பா­லா­னோர் மலாய் முஸ்­லிம் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். இந்­தக் கூட்­ட­ணிக்கு முகை­தீன் யாசின் தலைமை தாங்­கு­கி­றார்.

அக்­கூட்­ட­ணி­யில் பாஸ் கட்சி இடம்­பெற்­றுள்­ளது. தீவிர இஸ்­லா­மியக் கொள்­கை­க­ளைக் கொண்ட பாஸ் கட்சி இம்­முறை பல தொகுதி­ களை வென்­றுள்­ளது. இது மலே­சிய சீனர்­க­ளை­­யும் இந்­தி­யர்­க­ளை­யும் கவலை அடை­யச் செய்­துள்­ளது.

அன்­வார் இப்­ரா­ஹிம் தலை­மை­யி­லான பக்­கத்­தான் ஹரப்­பா­னும் அர­சாங்­கம் அமைக்க முனைப்­பு­டன் உள்­ளது. இந்­தக் கூட்­ட­ணி­யில் பல இன, பல சமய வேட்­பா­ளர்­கள் உள்­ள­னர். ஹரப்­பான் கூட்­ட­ணி­யில் ஜன­நா­யக செயல் கட்சி அங்­கம் வகிக்­கிறது. இதில் பெரும்­பா­லா­னோர் சீனர்­கள். இதன் கார­ண­மாக மலே­சி­யா­வின் பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளான மலாய்க்­கா­ரர்­க­ளின் ஆத­ரவு அதற்கு அவ்­வ­ள­வாக இல்லை.

தேர்­தல் முடிந்­த­தி­லி­ருந்து பல சர்ச்­சைக்­கு­ரிய டிக்­டாக் காணொளி ­கள் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மலே­சி­யா­வில் உள்ள சமூக ஊட­கப் பய­னீட்­டா­ளர்­கள் புகார் செய்­தி­ருந்­த­னர்.

1969ஆம் ஆண்­டில் மலே­சி­யா­வில் நிகழ்ந்த இனக் கல­வ­ரம் குறித்து அந்­தக் காணொ­ளி­கள் அமைந்­தி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தக் கல­வ­ரத்­தில் ஏறத்­தாழ 200 பேர் மாண்­ட­னர். 1969ஆம் ஆண்­டில் நடை­பெற்ற தேர்­த­லில் சீனர்­க­ளின் ஆத­ரவு பெற்ற எதிர்க்­கட்­சி­கள் கூடு­தல் தொகு­தி­க­ளைக் கைப்­பற்­றி­யதை அடுத்து, கல­வ­ரம் வெடித்­தது.

இம்­முறை அத்­த­கைய சூழல் ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தில் மலே­சிய அதி­கா­ரி­கள் உறு­தி­யு­டன் உள்­ள­னர்.

1969ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி நிகழ்ந்த இனக் கல­

வ­ரம் தொடர்­பான 13 காணொ­ளி­களை நீக்­கி­விட்­ட­தாக டிக்­டாக் கூறி­யது.

வெறுப்­பு­ணர்­வைப் பரப்­பும் பேச்சு, வன்­மு­றை­யைத் தூண்­டும் தீவி­ர­வா­தப் போக்கு ஆகி­யவற்றை ஒரு­போதும் சகித்­துக்­கொள்­ள முடியாது என்று டிக்­டாக் வலி­

யு­றுத்­தி­யுள்­ளது.

மன­தைப் புண்­ப­டுத்­தும், பாதிக்­கும் காணொ­ளி­க­ளைத் தங்­கள் பிள்­ளை­கள் பார்த்­த­தாகப் பெற்­றோர் சிலர் டிக்­டாக்­கி­டம் புகார் அளித்த பிறகு, 13 வய­துக்­கும் குறை­

வா­னோ­ரின் டிக்­டாக் கணக்­கு­கள் நீக்­கப்­படும் என்று டிக்­டாக் கூறி­யது. கிட்­டத்­தட்ட 100 டிக்­டாக் காணொ­ளி­களை ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் ஆராய்ந்­தது. அதில் சில காணொ­ளி­களில் இளம் மலாய் வீரர்­கள் என்று கூறிக்­கொள்­ளும் சிலர் கத்­தி­க­ளை­யும் அரி­வாள்­க­ளை­யும் ஏந்­திக்­கொண்டு அன்­வார் இப்­ரா­ஹி­மின் ஆத­ர­

வா­ளர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­

த­னர்.

இதற்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில் 1969 கல­வ­ரம் நிகழ்ந்­த­தற்­கான கார­ணத்தை விளக்கி பல­ர் காணொ­ளி­க­ளைப் பதி­விட்­

ட­னர்.

மலே­சி­யா­வில் உள்ள பல இன மக்­கள் ஒற்­று­மை­யு­டன் இருக்க வேண்­டும் என்று மலாய்க்­கா­ரர்­கள் பலர் அழைப்பு விடுத்­த­னர்.

இனக் கல­வ­ரம், வன்­மு­றை­யைத் தூண்­டு­வோரை அவர்­கள் சாடி­னர்.

இதற்­கி­டையே, புதிய பிர­த­மரைத் தேர்ந்­தெ­டுக்­கும் வரை பொறு­மை­யு­டன் இருக்­கும்­படி மலே­சிய

மாமன்­னர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், மாமன்­ன­ரின் அரண்­மனைக்கு வெளியே துப்­பாக்கி, கேட­யம் ஏந்திய காவல்­துறை அதி­கா­ரி­கள் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அது­மட்­டு­மல்­லாது, மலே­சி­யா­எங்­கும் உள்ள பிர­தான சாலை­களில் அந்­நாட்­டின் காவல்­து­றை­யி­னர் நேற்று வாக­னங்­க­ளை நிறுத்தி சோத­னை­யிட்­ட­னர்.

பொது ஒழுங்­கைக் கட்­டிக்­காக்­க­வும் மக்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­ய­வும் இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மலே­சிய காவல்­துறை தெரி­வித்­தது.

சாலை­க­ளைப் பயன்­ப­டுத்­து­

ப­வர்­க­ளின் நலன் கருதி உச்­ச­

வே­ளை­க­ளின்­போது சோதனை நடத்­தப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!