சீனாவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு

பெய்­ஜிங்: சீனா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. அன்­றாடப் பாதிப்பு மள­ம­ள­வென உயர்ந்­து­வ­ரும் நிலை­யில் அந்­நாட்­டின் பெரிய நக­ரங்­களில் கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­

பட்­டுள்­ளன.

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க ஆள்­ந­ட­மாட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் சீன அதி­கா­ரி­கள் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ள­னர்்.

நேற்று முன்­தி­னம் நில­வ­ரப்­படி மேலும் 28,183 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று அதை­விட குறை­வாக 27,307 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. கடந்த ஏப்­ரல் மாதத்­தில் ஷாங்­காய் நக­ரில் கொவிட்-19 பாதிப்பு உச்­சத்தை எட்­டி­யது.

ஆக அதி­க­மாக ஏப்­ரல் மாதத்­தில், ஒரு நாளில் 28,973 பேர் நோய்­வாய்ப்­பட்­ட­னர்.

தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,476 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து, பெய்­ஜிங்­கில் உள்ள பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன. வீட்­டி­லி­ருந்து கல்வி கற்கும்­ படி மாண­வர்­க­ளி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பெய்­ஜிங்­கில் கடை­களும் உண­வ­கங்­களும் வெறிச்­சோடிக் கிடக்­கி­ன்றன.

முடக்­க­நிலை தொட­ரக்­கூ­டும் என்று அந்­ந­கர மக்­கள் கவ­லை­யில் ஆழ்ந்­துள்­ள­னர். கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் அங்­குள்ள மக்­க­ளின் அன்­றாட வாழ்க்கை மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­

பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, முழு பாது­காப்பு ஆடை அணிந்­தி­ருந்த சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்­க­ளு­டன் செங்சோ நக­ரைச் சேர்ந்த மக்­கள் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதி­கா­ரி­கள் போட்ட தடுப்­பு­களை மக்­கள் உடைத்­தெ­றிந்­த­னர்.

நூற்­றுக்­க­ணக்­கா­னோர் சுகா­தார அதி­கா­ரி­க­ளு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்டதைக் காட்டும் காணொ­ளி­கள் சமூக வலைத்­

த­ளங்­களில் வலம் வந்­தன.

ஷாங்­காய் நக­ருக்­குச் செல்­வோர் ஐந்து நாள்­க­ளுக்குப் பொது இடங்­க­ளுக்­குச் செல்­லக்­கூ­டாது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். இந்த விதி­முறை நேற்று முதல் நடப்­புக்கு வந்­துள்­ளது.

ஷாங்­காய் நக­ருக்­குச் செல்­வோர் உண­வ­கங்­கள், மது­பா­னக்­கூ­டங்­கள், கடைத்­தொ­கு­தி­கள், பேரங்­கா­டி­கள், ஈரச்­சந்­தை­கள், இணைய நிலை­யங்­கள், பொழு­து­ போக்கு நிலை­யங்­கள் போன்ற இடத்­துக்­குச் செல்ல முடி­யாது என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பெய்ஜிங்கில் கடந்த வாரயிறுதியில் கொவிட்-19 காரணமாக ஒருவர் மாண்டார்.

இதையடுத்து, பொது இடங்களுக்குச் செல்வதற்கு முன்பு, அல்லது பேருந்தில் பயணம் செய்வதற்கு முன்பு பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு கிருமித்தொற்று இல்லை என்று பெய்ஜிங்வாசிகள் உறுதி செய்ய வேண்டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!