இறந்த குழந்தையை ஊறுகாய் கலனில் மறைத்துவைத்த பெற்றோர்

சோல்: தென்­கொ­ரி­யா­வில் பெண் குழந்­தை­யின் சட­லம் பிளாஸ்­டிக் கொள்­க­ல­னில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, அதன் பெற்­றோ­ரிடம் அந்நாட்டு காவல்­து­றை­யி­னர் விசாரணை நடத்துகின்றனர்.

15 மாதக் குழந்­தை­யின் சட­லத்தை அதன் பெற்­றோர் மூன்று ஆண்­டு­க­ளாக மறைத்து வைத்­தி­ருந்­த­தாகக் காவல்­துறையினர் சந்­தே­கப்­ப­டு­கின்­ற­னர்.

குழந்­தை­யின் 29 வயது தந்தை, சிறை­யில் இருந்தபோது அதன் 34 வயது தாயார் அதைக் கண்­டு­கொள்­ளா­மல் விட்­டு­விட்­டார் என்று நம்­பப்­ப­டு­கிறது.

குழந்தை இறந்­த­தும் சட­லத்தை அதன் தாயார் வீட்­டி­லேயே வைத்­தி­ருந்­தார்.

சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யான குழந்தையின் தந்தை, சட­லத்தை வேறு மாநி­லத்­தில் உள்ள தனது பெற்­றோ­ரின் வீட்­டில் மறைத்து வைத்தார்.

கிம்ச்சி வைப்­ப­தற்­கான கொள்­க­ல­னில் 15 மாதக் குழந்­தையை வைத்து, அதை பர­ணில் மறைத்து வைத்­தார்.

கிம்ச்சி, தென் கொரி­யர்­க­ளின் ஊறு­கா­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

குழந்­தையை யாரும் பாலர்­

பள்­ளி­யில் சேர்க்­க­வில்லை என்­

ப­தும் அதை மருத்­து­வப் பரி­

சோ­த­னை­க­ளுக்கு அழைத்­துச் செல்­ல­வில்லை என்­ப­தும் உள்­ளூர் அதி­கா­ரி­க­ளின் கவ­னத்­துக்கு வந்­தது.

சந்­தே­கத்­தின் பேரில் காவல்­

து­றை­யில் புகார் அளிக்­கப்­பட்­டது.

குழந்­தை­யின் தாயா­ரைக் கைது செய்து அதி­கா­ரி­கள் விசா­ரித்­த­னர். முத­லில், குழந்­தை­யைத் தெருவில் விட்டுச்­சென்று விட்­ட­தா­கக் கூறிய அப்­பெண், பின்­னர் உண்­மையை ஒப்­புக்கொண்­டார். குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!