மகாதீர்: தேர்தலில் தோற்றது மனவேதனை அளிக்கிறது, வரலாறு பற்றி எழுதப்போகிறேன்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் வர­லாறு பற்றி எழு­தப்­போ­வ­தாக அந்­நாட்­டின் முன்­னாள் பிர­த­மர் டாக்­டர் மகா­தீர் முகம்­மது தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் நடந்து முடிந்த மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் லங்­கா­வி­யில் போட்­டி­யிட்ட டாக்­டர் மகா­தீர் படு­தோல்வி அடைந்­தார்.

அவ­ருக்கு 6.8 விழுக்­காடு வாக்­கு­கள் மட்­டுமே கிடைத்­தன. இத­னால் வைப்­புத்­தொ­கை­யை­யும் அவர் இழந்­தார்.

தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ள­ருக்­குக் குறைந்­த­பட்­ச 12.5 விழுக்­காடு வாக்­கு­கள் கிடைத்­தால் மட்­டுமே வைப்­புத்­தொகை திரும்ப கொடுக்­கப்­படும்.

1969ஆம் ஆண்­டில் நடை­பெற்ற தேர்­த­லில் டாக்­டர் மகா­தீர் தோல்வி அடைந்­தார். அதன் பிறகு நடை­பெற்ற தேர்­தல்­களில் வெற்றி பெற்ற டாக்­டர் மகா­தீர், இவ்­வாண்டு நடை­பெற்ற தேர்­த­லில் படுதோல்­வி­யைச் சந்­தித்­துள்­ளார்.

தேர்­த­லின் முடி­வு­கள் தமக்கு மன­வே­த­னையை அளிப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், மக்­க­ளின் விருப்­பத்தை ஏற்­ப­தாக அவர் கூறி­னார்.

தமது பெஜு­வான் கட்­சி­யின் சார்­பாக போட்­டி­யிட்ட அனை­வ­ரும் தேர்­த­லில் தோல்வி அடைந்­த­தால் நாட்­டுக்­காக தாம் வகுத்­தி­ருந்த திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த இய­லாது என்­றார் டாக்­டர் மகா­தீர்.

பெஜுவான் கட்சி 125 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது.

மலே­சி­யா­வின் அடுத்த பிர­த­

ம­ரா­கப் பதவி ஏற்­ப­வர் நாட்­டின் பிரச்சி­னை­களை முடி­வுக்­குக் கொண்டு வர வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்­றார் அவர்.

இந்­நி­லை­யில், மலே­சிய வர­லாற்­றில் பல முக்­கிய நிகழ்­வு­கள் பதிவு செய்­யப்­ப­டா­மல் இருப்­ப­தாக 97 வயது டாக்­டர் மகா­தீர் தெரி­வித்­தார்.

குறிப்­பாக, பிரிட்­டிஷ் ஆட்­சி­யின்­போது நிகழ்ந்த பல நிகழ்­வு­க­ளைப் பற்றி பல­ருக்­குத் தெரி­யாது என்­றார் அவர். அவற்­றைப் பற்றி எழுதி, புத்­தக வடி­வில் வெளி­யிட எண்­ணம் கொண்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். இந்த நூலைப் புனைய விருப்­பம் உள்ள கதா­சி­ரி­யர் தம்­மைப் பேட்டி காண­லாம் என்­றார் டாக்­டர் மகா­தீர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!