‘பகுதிவாரி வரவுசெலவுத் திட்டத்துக்கு அனுமதி வழங்கலாம்’

கோலா­லம்­பூர்: அடுத்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை ஆண்டு இறு­திக்­குள் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்து அது மன்­றத்­தின் ஒப்­பு­த­லைப் பெற­வில்லை என்­றால், நாடா­ளு­மன்­றம் பகு­தி­வாரி வர­வு­செ­ல­வுத் திட்­டம் ஒன்­றுக்கு அனு­மதி வழங்­க­லாம் என்று மலே­சிய முன்­னாள் நிதி­ய­மைச்­சர் ஸஃப்ருல் துங்கு அப்­துல் அஸிஸ் தெரி­வித்­துள்­ளார்.

இப்­படி செய்­வ­தற்கு அர­சி­யல் சாச­னப் பிரிவு 102 (a) அனு­மதி அளிப்­ப­தாக அவர் கூறி­னார்.

"இதன்­படி, அடுத்த நிதி­யாண்­டுக்­குள் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­துக்கு ஒப்­பு­தல் பெற கால அவ­கா­சம் இல்லை எனில், பகு­தி­வாரி வர­வு­செ­ல­வுத் திட்­டம் ஒன்­றுக்கு நாடா­ளு­மன்­றம் ஒப்­பு­தல் வழங்­க­லாம்.

"இதன்­மூ­லம், இவ்­வாண்டு ஏற்­கெ­னவே தாக்­கல் செய்­யப்­பட்ட வர­வு­செ­ல­வுத் திட்­டத்­துக்கு மாறாக, டிசம்­பர் 31ஆம் தேதிக்­குள் பகு­தி­வாரி வர­வு­செ­ல­வுத் திட்­டம் ஒன்­றுக்கு ஒப்­பு­தல் பெற நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தைக் கூட்­ட­லாம்," என்று திரு ஸஃப்ருல் நேற்று தமது அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தார்.

"சிலர் பகு­தி­வாரி வர­வு­செ­ல­வுத் திட்­டத்தைத் தாக்­கல் செய்­வ­தற்குப் பதில் அடுத்த ஆண்டு வரை காத்­தி­ருக்­க­லாமே எனக் கேட்­க­லாம். ஆனால், இத­னால் என்ன ஆகும் என்­றால் அரசு நிர்­வா­கத்தை செம்­மை­யாக நடத்த இய­லாது.

"அர­சாங்­கம் இந்த இடைக்­கா­லத்­தில் பொதுச் சேவை நட­வ­டிக்­கை­கள் தொடர்­வதை உறுதி செய்ய வேண்­டும்.

"அத்­து­டன், உடற்­கு­றை­யுள்­ளோர், வசதி குறைந்த குடும்­பங்­கள் ஆகி­யோ­ரின் தேவை­க­ளை­யும் அரசு கவ­னிக்க வேண்­டும்.

"அத்­து­டன் மானி­யங்­களும் அறி­விக்­கப்­பட வேண்­டும்.

"இத­னால்­தான், நாடா­ளு­மன்­றம் இது­போன்ற சூழல்­களில் பகு­தி­வாரி வர­வு­செ­ல­வுத் திட்­டத்­துக்கு வழி­வகை செய்­துள்­ளது," என்று அவர் விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!