அரச குடும்பங்களும் அரசியல் தலைவர்களும் அன்வாருக்கு வாழ்த்துகள்

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் புதிய பிர­த­ம­ரா­கப் பத­வி­யேற்­றி­ருக்­கும் அன்­வா­ருக்கு மலே­சி­யா­வின் அரச குடும்­பத்­தி­ன­ரி­ட­மி­ருந்­தும் அர­சி­யல் தலை­வர்­க­ளி­டம் இருந்­தும் வாழ்த்­து­கள் குவிந்த வண்­ணம் உள்­ளன.

முக்­கி­ய­மாக ஜோகூர் சுல்­தான் இப்­ரா­கிம் இப்னி அல்­மர்­ஹூம் சுல்­தான் இஸ்­கந்­தர், துங்கு மஹ்­கோட்டா ஜோகூர் துங்கு இஸ்­மா­யில் இப்னி சுல்­தான் இப்­ரா­கிம் ஆகி­யோர் மலே­சி­யா­வின் பத்­தா­வது பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்­றி­ருக்­கும் அன்­வார் இப்­ரா­கி­முக்கு தங்­கள் ஃபேஸ்புக் பதி­வில் வாழ்த்­துத் தெரி­வித்­துள்­ள­னர். அத்­து­டன் முன்­னாள் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாகோப், பிர­த­மர் அன்­வா­ருக்­கும் அவரை பிர­த­மர் பத­விக்கு நிய­ம­னம் செய்­த­தற்­காக மன்­ன­ருக்­கும் பாராட்டு தெரி­விப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

மேலும் அவர், "அன்­வார் தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கம், அர­சி­யல் மற்­றும் பொரு­ளா­தார நிலைத்­தன்­மை­யைத் தொடர்ந்து கட்­டிக்­காக்க நான் பிரார்த்­தனை செய்­கி­றேன்," என்று தெரி­வித்­துள்­ளார்.

அவ­ரது ஆட்­சிக் காலத்­தில், மலே­சியா சந்­தித்த சவால்­களை எதிர்­கொண்டு பொரு­ளி­யல் மீட்­சிக்­காக அர­சாங்­காத்­தால் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்த அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

மேலும் மலே­சிய சீன சங்­கத்­தின் தலை­வர் டாக்­டர் வீ கா சியோங் உள்­ளிட்ட அர­சி­யல் தலை­வர்­களும் அன்­வா­ருக்கு வாழ்த்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

புதிய பிர­த­ம­ரின் தலை­மை­யி­லான ஆட்­சி­யு­டன் பழி­வாங்­கும் அர­சி­யல் போக்­குக்கு முற்­றுப்­புள்­ளி­வைப்­போம்.

"பல இன மக்­கள் வாழும் இந்த சமூ­கத்­தில் ஒற்­று­மை­யின்மை தலை­தூக்­கா­மல் இருப்­பதை உறு­தி­செய்­வோம்," என்று கூறி­யுள்­ளார்.

அத்­து­டன் "மலே­சியா நிலைத்­தன்­மை­யு­டன் ஆன செழிப்பை நோக்கி நக­ரட்­டும்," என்று கூறி­யுள்­ளார்.

பெரிக்­காத்­தான் நேஷ­னல் கட்­சி­யின் பாஸ் கட்சி இளை­யர் பிரி­வுத் தலை­வர் அக­மது ஃபத்லி ஷாரி, அன்­வார் இப்­ரா­கி­முக்­கும் பக்­கத்­தான் கட்­சி­யி­ன­ருக்­கும் தனது வாழ்த்­து­களை ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன், புதிய அர­சாங்­கம், பொரு­ளி­யல் மீட்சி, மக்­கள் நலன் ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்­தும் என்று தெரி­வித்­துள்­ளார்.

மலேசிய ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் (முடா) பொதுச்­செ­ய­லா­ளர் அமீர் அப்த் ஹாடி கூறு­கை­யில், "இந்த மகிழ்ச்சி, துய­ரங்­க­ளை­யும் வடுக்­க­ளை­யும் சுமந்­த­வாறு கண்­ணீர் சிந்­திய நீண்ட பய­ணத்­திற்­குப் பிறகு கிடைத்­துள்­ளது. நாம் உண­ரும் இந்த மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்த வார்த்­தை­களே இல்லை. முடா இந்த மகிழ்ச்­சி­யைப் பகிர்ந்­து­கொள்­கிறது," என்று உருக்­க­மா­கக் கூறி­யுள்­ளார்.

இந்நிலையில், அரபு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதமர்கள் அன்வார் இப்ராகிமுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பஹ்ரைன், கத்தார், ஏமன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!