பைடன்: உக்ரேன்மீதான போரை நிறுத்த புட்டினை சந்திக்க தயார்

வாஷிங்­டன்: ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் உக்­ரேன்­மீ­தான போரை நிறுத்­தும் வழி குறித்து உண்­மை­யி­லேயே விவா­திக்க விரும்­பி­னால் அவ­ரைச் சந்­திக்­கத் தயா­ராக இருப்­ப­தாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்­ளார்.

ஆனால் ரஷ்ய அதி­பர் இன்­னும் அவ்­வாறு உறு­தி­யா­கக் கூற­வில்லை என்­றார் அவர்.

பிரெஞ்சு அதி­பர் இ­மா­னு­வேல் மெக்­ரோ­னு­டன் இணைந்து வெள்ளை மாளி­கை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது திரு பைடன் இவ்­வாறு கூறி­னார்.

உக்­ரேன்­மீ­தான ரஷ்­யா­வின் போருக்குத் தாங்­கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி­விக்­கப்­போ­வ­தாக இரு தலை­வர்­களும் வலி­யு­றுத்­தி­னர்.

ஏற்­றுக்­கொள்ள இய­லாது எனக் கரு­தும் எந்­த­வி­த­மான சம­ர­சத்­திற்­கும் உடன்­ப­டும்­படி உக்­ரே­னைத் தாங்­கள் கட்­டா­யப்­ப­டுத்த மாட்­டோம் என்று பிரெஞ்சு அதி­பர் தெளி­வு­படுத்­தி­னார்.

இரு அதி­பர்­களும் வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில், உக்­ரேன் அதன் இறை­யாண்­மை­யைத் தற்­காத்­துக்­கொள்ள இரு நாடு­களும் தொடர்ந்து ஆத­ரவு வழங்­கும் என்று குறிப்­பிட்டுள்­ள­னர்.

போரில் 13,000 உக்ரேனிய வீரர்கள் உயிரிழப்பு

உக்­ரே­னிய உய­ர­தி­காரி ஒரு­வர், கடந்த பிப்­ர­வரி 24ஆம் தேதி மாஸ்கோ தாக்­கு­த­லைத் தொடங்­கி­ய­தில் இருந்து இது­வரை ஏறக்­கு­றைய 13,000 உக்­ரே­னிய வீரர்­கள் கொல்­லப்­பட்­ட­தா­கக் கூறி­யி­ருக்­கும் வேளை­யில் அமெ­ரிக்க, பிரெஞ்சு அதி­பர்­க­ளின் கூட்­ட­றிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கிறது.

உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்­கி­யின் ஆலோ­ச­கர் மைக்­கைலோ போடோ­லி­யாக் வீரர்­கள் கொல்­லப்­பட்­டது குறித்து வெளி­யிட்ட தக­வலை உக்­ரே­னிய ராணு­வம் இன்­னும் உறு­திப்­ப­டுத்­த­வில்லை.

போர் தொடங்­கி­ய­தில் இருந்து உக்­ரேன், ரஷ்யா என இரு­த­ரப்­புமே உயி­ரி­ழந்த வீரர்­கள் எண்­ணிக்­கையை உறு­தி­யா­கத் தெரி­விக்­க­வில்லை.

அமெ­ரிக்­கா­வைச் சாடும் ரஷ்யா

இவ்­வே­ளை­யில், ரஷ்­யா­வின் நலன்­க­ளைப் பாது­காக்­கும் பொருட்டு பேச்சு நடத்த மாஸ்கோ தயா­ராக இருப்­ப­தா­க­வும் ஆனால் இரு­த­ரப்­புக்­கும் இடையே அடிப்­படை அம்­சங்­களில் இணக்­கம் இல்லை என்­றும் அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கூறி­யுள்­ளார். உக்­ரே­னில் ரஷ்யா கைப்­பற்­றிய பகு­தி­களை ரஷ்ய எல்­லை­யாக ஏற்க வாஷிங்­டன் மறுப்­ப­தாக அவர் சாடி­னார்.

போரை நிறுத்­து­வ­தில் ரஷ்ய அதி­பர் ஆர்­வம் காட்­டி­னால் மட்­டுமே பேச்சு நடத்­தத் தயார் என்று கூறிய அமெ­ரிக்க அதி­பர், நேட்டோ நட்பு நாடு­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்த பிறகே அதற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று கூறி­யி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!