கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்தும் சீன நகரங்கள்

பெய்­ஜிங்: கொவிட்-19 தொற்­று­நோய் இன்­னும் பர­வி­வ­ரும் சீன நக­ரங்­களில் சோத­னை­கள், தனிமை உத்­த­ரவு போன்ற கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. பர­வ­லான சமூக அமை­தி­யின்­மைக்­குப் பிறகு இவ்­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக, ஹாங்­காங்­கின் வடக்கே உள்ள குவாங்­சோ­வில் கிரு­மித் தடுப்பு உடை­ய­ணிந்த கல­கத் தடுப்­புப் பிரி­வி­ன­ரு­டன் மக்­கள் மோதி­ய­தை­ய­டுத்து, ஏழு மாவட்­டங்­களில் குவாங்சோ கட்­டுப்­பா­டு­களை நீக்­கி­யது.

இப்­போது அங்கே குறை­வான உட­ன­டிப் பரி­சோ­தனை, தொற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நெருங்­கி­ய­வர்­கள் வீட்­டி­லேயே ஒன்­றா­கத் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள அனு­மதி ஆகி­யவை அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஆனால் வேறு­வித பிரச்­சி­னை­கள் தலை­தூக்­கி­யுள்­ளன. "விமான நிலை­யத்­திற்­குச் செல்ல 48 மணி­நேரக் குறி­யீடு தேவை. ஆனால் பெரும்­பா­லான சோதனை நிலை­யங்­கள் அகற்­றப்­பட்­டுள்­ளன," என்றார் குவாங்­சோ­வில் உள்ள வெளி­நாட்டுத் தூத­ரக அதி­காரி ஒரு­வர்.

விரைவில் நாடு முழு­வ­தும் கட்­டுப்­பா­டு­க­ளை அகற்றவிருக்கிறது சீன அரசாங்கம். பெய்ஜிங் உள்ளிட்ட நக­ரங்­களில் ஏற்­கெனவே வீட்­டி­லேயே தனி­மைப்­படுத்­திக்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளதாகத் தெரிகிறது.

தலை­ந­க­ரில் சில வணிக வளா­கங்­கள் நேற்று முன்­தி­னம் முதல் மீண்­டும் திறக்­கப்­பட்டுள்­ளன.

மக்­கள் உணவை வாங்­கிச் செல்ல மட்­டுமே உண­வ­கங்­கள் திறந்­தி­ருக்­குமெனக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!