உண்மையை மறைத்ததாகச் சந்தேகம்; அதிகாரி கைது

சோல்: வழக்கு ஒன்றை முறை­யற்ற வகை­யில் கையாண்ட குற்­றத்­துக்­காக முன்­னாள் தென்­

கொ­ரிய தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 2020ஆம் ஆண்­டில் தென்­கொ­ரிய மீன்­துறை அதி­காரி ஒரு­வர் கட­லில் இருந்­த­போது வட­கொ­ரிய ராணு­வத்­தி­ன­ரால் கொல்­லப்­பட்­டார்.

ஆனால், சூதாட்­டப் பழக்­கத்­தால் ஏற்­பட்ட கடன் தொல்லை, மன­நல பாதிப்பு, மகிழ்ச்­சி­யற்ற வாழ்க்கை ஆகி­யவை கார­ண­மாக திரு லீ நே ஜுன் வட­கொ­ரி­யா­வுக்­குத் தப்­பிச் செல்ல முயன்­ற­தாக அப்­போ­தைய தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜே இன் தலை­மை­யி­லான அர­சாங்­கம் தெரி­வித்­

தி­ருந்­தது. இதற்கு திரு லீயின் குடும்­பம் மறுப்பு தெரி­வித்­துள்­ளது. 2020ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் யோன்­பி­யோன் தீவுக்கு அரு­கில் திரு லீ தமது பட­கில் இருந்­த­தா­க­வும் அதன் பிறகு அவர் மாய­மா­ன­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. அந்­தக் கடற்­ப­குதி வட­கொ­ரி­யா­வுக்கு அரு­கில் உள்­ளது. 47 வயது திரு லீயை வட­கொ­ரிய ராணுவ வீரர்­கள் சுட்­டுக்­கொன்­ற­தா­க­வும் பிறகு அவ­ரது பட­கிற்கு அவர்­கள் தீவைத்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.திரு லீயின் மர­ணம் குறித்­தும் 2019ஆம் ஆண்­டில் தஞ்­சம் கேட்டு தென்­கொ­ரி­யா­வுக்கு வந்த இரண்டு வட­கொ­ரிய மீன்­வர்­களை மீண்­டும் வட­கொ­ரி­யா­வுக்கு அனுப்­பி­யது தொடர்­பா­க­வும் தென்­கொ­ரிய அரசு வழக்­க­றி­ஞர்­கள் விசா­ரணை நடத்­தி­னர். திரு லீ கொலை செய்­யப்­பட்­டதை மறைத்து, ஆதா­ரங்­களை அழித்ததாக முன்­னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

தென்­கொ­ரி­யா­வின் உள­வுப் பிரி­வுக்­கும் தலை­வ­ராக இருந்த அந்த உயர் அதி­காரி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!