சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்வால் கிருமி அச்சம்

பெய்­ஜிங்: சீனா, கடு­மை­யான கட்டுப்­பா­டு­க­ளு­டன் கொவிட்-19 கிரு­மியை முற்­றி­லும் ஒழித்­துக் கட்டும் இறுக்­க­மான கொள்­கையைக் கைவிட்­டுள்­ள­தால் நாட்டு மக்­கள் சுதந்­தி­ர உணர்வை அனு­ப­வித்து வரு­கின்­ற­னர்.

ஆனால் மக்­க­ளி­டையே கிருமி இன்­னும் வேக­மாகப் பர­வ­லாம் என்ற அச்­சம் எழுந்­துள்­ளது. சில நக­ரங்­களில் கிரு­மிக்கு எதி­ராக விழிப்­பு­டன் இருக்­கு­மாறு குடி­யி­ருப்­பா­ளர்­கள் எச்­ச­ரிக்­கப்­பட்டு உள்­ள­னர். மூன்று ஆண்­டு­க­ளாக தொற்­று­ நோ­யின் பிடி­யி­லி­ருந்த சீனா­வில் அதன் கடு­மை­யான கிரு­மித் தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து மீண்டு உல­கின் பிற பகு­தி­க­ளு­டன் இயல்­பான வாழ்க்­கையை மக்கள் தொடங்­க­வுள்­ள­னர்.

தொற்­று­நோய் கண்­ட­வர்­களை வலுக்­கட்­டா­ய­மாக அரசு இடங்­களில் தனி­மைப்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளால் வெறுப்­ப­டைந்த மக்­கள் கடந்த மாதம் நாடு முழு­வ­தும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர்.

இது, 2012ல் அதி­பர் ஸி ஜின்­பிங் பொறுப்பு ஏற்ற பிறகு நடந்­துள்ள மக்­க­ளின் மிகப்­பெ­ரிய அதிருப்தி சம்பவங்களாகும்.

ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் விதமாக சிலர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அவற்றை பெய்ஜிங் ஆமோதிக்கவோ மறுக்கவோ இல்லாத நிலையில் மக்கள் எதிர்ப்புக்கு அடிபணியும் வகையில் பெய்ஜிங் உள்ளிட்ட பெரிய நகரங் களில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

மிதமான நோய்த்தொற்று உள்ளவர்கள் வீட்டில் தங்கி சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று தேசிய சுகாதார ஆணையம், தெரிவித்தது. பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இனி கொவிட்-19 பரிசோதனை தேவை யில்லை என்றும் அது கூறியது. இதன் காரணமாக உள்ளூர் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில் சிலர் தங் களுக்குத் தொற்று இல்லை என்பதைக் காட்டும் பரிசோதனை களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

மற்ற சிலர் எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர்.

“கொவிட்-19 பயங்கரமான நோய் அல்ல என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் தொற்றக் கூடியது. உடல்நிலை பாதிக்கக்

கூடியது,” என்று வெய்போ தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தெரிவித்தது. “எங்கள் இதயத்தில் ஏற்பட்டு உள்ள அச்சத்தை எளிதில் அகற்ற முடியாது,” என்று அந்தப் பதிவு கூறியது. சீனாவில் நேற்று வரை 21,439 புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது, ஒரு நாள் முன்பு 25,321ஆக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!