பாலியில் குண்டுவைத்தவர் விடுதலை; ஆஸ்திரேலியர்கள் கொதிப்பு

சிட்னி: பாலி­யில் குண்டு வைத்த உமர் பதெக் விடு­விக்­கப்­பட்­ட­தால் ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் கொதிப்­ப­டைந்­துள்­ள­னர்.

2002ல் பாலி­யில் உள்ள இரண்டு இரவு கேளிக்கை விடு­தி­களில் குண்டு வெடித்­த­தில் தாங்­கள்­தான் ஆயுள் தண்­ட­னையை அனு­ப­வித்து வரு­கி­றோம் என்று உயிர் பிழைத்த சிலர் கூறி­யுள்­ள­னர்.

“என் வாழ்க்­கையே திசை மாறி விட்­டது,” என்று பிபி­சிக்கு அளித்த பேட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லி­ய­ரான ஆண்ட்ரு ஸாபி தெரி­வித்­துள்­ளார்.

குண்­டு­வெ­டிப்­பில் திரு ஸாபி­யின் நண்­பர்­கள் கொல்­லப்­பட்­ட­தோடு அவ­ரது கால்­களும் துண்­டிக்­கப்­பட்­டன.

கடந்த புதன்­கி­ழமை குண்டு வெடிப்­புக்கு கார­ண­மான உமர் பதெக் இந்­தோ­னீ­சிய சிறை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

அவர் தீவி­ரச் சித்­தாந்­தத்­தி­லிருந்து மாறி­விட்­ட­தாக இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

2002ல் அக்­டோ­பர் 12ஆம் தேதி நடந்த பயங்­க­ர­வா­தத் தாக்­கு­த­லில் 21 நாடு­க­ளைச் சேர்ந்த 202 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

அவர்­களில் 88 பேர் ஆஸ்­திரே லியர்கள்.

ஜமா இஸ்­லா­மியா அமைப்­புக்கு குண்டு தயா­ரித்­துக் கொடுத்­த­தாக பதெக் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது. பத்து ஆண்­டு­க­ளாக அவரை கண்டுபி­டிக்க முடி­ய­வில்லை.

2012ல் அவ­ருக்கு 20 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தனக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னை­யில் பாதிக்கும் சற்று கூடு­த­லாக அவர் அனு­ப­வித்­துள்­ளார்.

இந்­தோ­னீ­சிய அதி­கா­ரி­கள், பதெக் இனி அச்­சு­றுத்­த­லாக இல்லை என்றும் நல்ல நடத்­தைக்­காக தொடர்ச்­சி­யாக தண்­ட­னை குறைக்கப்பட்டு விடு­த­லைக்­கு அவர் தகுதி பெற்றார் என்றும் கூறி­உள்­ள­னர்.

ஆனால் குண்டுவெடிப்பில் ஐந்து நண்பர்களை இழந்த மற்றோர் ஆஸ் திரேலியரான ஜான் லாசின்ஸ்கி, அதிர்ச்சியும் கோபமும் அடைந்ததாகக் கூறினார்.

“இவன் மீண்டும் தனது வாழ்க்கைக்குத் திரும்பியிருக் கிறான். எங்களில் பலருக்கு மீண்டும் எங்கள் வாழ்க்கையைத் திரும்பப் பெற முடியாது,” என்று அவர் வியாழக்கிழமை பிபிசியிடம் தெரிவித்தார்.

“இது பயங்கரமான தவறான செயல்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!