வெர்ஜினியா துப்பாக்கிச்சூட்டில் இருவர் மரணம்

ரிச்­மண்ட்: அமெ­ரிக்­கா­வின் வெர்­ஜி­னியா மாநி­லம், ரிச்மண்­டில் நேற்று முன்­தி­னம் உயர்­நி­லைப் பள்ளி நிகழ்ச்சி முடிந்து வெளி­யே­றிக் கொண்­டி­ருந்த கூட்­டத்­தினரை நோக்கி துப்­பாக்­கிக்­காரன் ஒரு­வன் சுட்­ட­தில் இரு­வர் கொல்­லப்­பட்­ட­னர்; ஐவர் காய­ம் அடைந்­த­னர்.

சுடப்­பட்­ட­வர்­களில் ஒரு­வருக்குத் தெரிந்த 19 வயது சந்தேக ஆட­வ­ரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர். வேறு குற்­றச்­சாட்­டு­களு­டன், அவர்­மீது இரண்­டாம் நிலை கொலைக் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­ப­டக்­கூ­டும் என்று செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் ரிச்­மண்ட காவல்­து­றைத் தலை­வர் ரிக் எட்­வர்ட்ஸ் தெரி­வித்­தார்.

ஒரே­யொ­ரு­வர் மீதான வாக்கு­வா­தத்­துக்­காக வெறிச்­செ­ய­லில் ஈடு­பட்ட துப்­பாக்­கிக்­கா­ர­னின் நடத்­தையை “அரு­வ­ருப்­பா­னது, கோழைத்­த­ன­மா­னது” என்று திரு எட்­வர்ட்ஸ் வர்­ணித்­தார்.

அந்­தத் துப்­பாக்­கிக்­கா­ரன் நான்கு கைத்­துப்­பாக்­கி­களை வைத்­தி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இறந்­த­வர்­கள் இரு­வ­ரும் 18, 36 வய­து­டைய ஆட­வர்­கள். அவர்­கள் தந்­தை­யும் மக­னு­மா­வர் எனக் கூறப்­படும் ஊட­கத் தகவல்­களை திரு எட்­வர்ட்ஸ் உறு­திப்­படுத்­த­வில்லை.

பள்­ளி­கள், கடைத்­தொ­கு­தி­கள், தேவா­ல­யங்­கள் போன்ற பொது இடங்­களில் நடை­பெ­றும் துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வங்­களுக்கு அமெ­ரிக்கா பழ­கி­விட்­டது. வெர்­ஜி­னி­யா­வில் நடை­பெற்ற துப்­பாக்­கிச்­சூடு, இவ்­வாண்டு இது­வரை அமெ­ரிக்­கா­வில் நடை­பெற்­றுள்ள 279வது துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வ­மா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!