டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஆட்சியர் கிரெக் அபோட், வெளிநாட்டு குடியேறிகளை டெக்சாஸில் இருந்து ஜனநாயகக் கட்சி ஆட்சி நடக்கும் இதர மாநிலங்களுக்கு அனுப்பும் ஒரு திட்டத்தைத் தீட்டி இருக்கிறார்.
அதன் ஒரு பகுதியாக டெக்சாஸ் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் இருக்கும் பிரவுன்ஸ்வில் நகரில் இருந்து சிக்காகோவிற்கு ஒரு பேருந்தில் குடியேறிகள் அனுப்பப்பட்டனர்.
டெக்சாஸ் அரசாங்கம் வாடகைக்கு எடுத்திருந்த அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது மூன்று வயது குழந்தை பேருந்திலேயே மாண்டுவிட்டது.
அப்போது அந்தக் குழந்தையின் பெற்றோரும் உடனிருந்தனர். குழந்தைக்குத் திடீரென காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் அதையடுத்து குழந்தை மயங்கி விழுந்துவிட்டதாகவும் சான் அண்டோனியோ தொகுதியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் காஸ்ட்ரோ தெரிவித்தார்.
அந்த மரணம் வியாழக்கிழமை நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

