வேரோடு சாய்ந்து விழுந்த மரம்: நூலிழையில் உயிர்தப்பிய தாய்-மகன்

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்: நூலிழையில் உயிர்தப்பிய தாய்-மகன்

1 mins read
b796b172-0693-4017-97b9-dd16cf6c4a80
வேரோடு சாய்ந்து விழுந்த இரு அங்சானா மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடும் ஊழியர். - படம்: தி ஸ்டார்

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலம், மெக்அலிஸ்டர் சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த மாது ஒருவர், கனமழையின்போது வேரோடு சாயவிருந்த மரத்தைத் தவிர்க்க உடனடியாக பிரேக் போட்டார்.

ஒருவழிச் சாலையான ஜாலான் மெக்அலிஸ்டரில் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த அந்த மாது, சாலையின் இடதுபக்கம் இருந்த அங்சானா மரம் வேரோடு சாய்ந்து விழவிருப்பதைக் கவனித்தார்.

அப்போது வாகனத்தில் ஆறு வயதுக்கும் எட்டு வயதுக்கும் இடைப்பட்ட அவருடைய மகன் இருந்ததாக நம்பப்படுகிறது.

“அந்த மரம் சாய்ந்து விழவிருப்பதை நான் கவனித்தேன். எனவே, உடனடியாக நான் பிரேக் அழுத்தியதால் அம்மரம் என் வாகனத்தின் மீது விழுவதைத் தவிர்க்க முடிந்தது,” என்று சனிக்கிழமை (மே 11) சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் அந்த மாது கூறினார்.

இன்னும் அதிர்ச்சியில் இருந்த அந்த மாது, செய்தியாளர்களிடம் மேல்விவரம் கூற மறுத்துவிட்டார்.

குறிப்புச் சொற்கள்