You are here

உல‌க‌ம்

சீனாவில் பரவும் ஆபத்தான பன்றிக் காய்ச்சல்

ஷாங்காய்: சீனாவில் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களில் ஆப் பிரிக்க பன்றிக் காய்ச்சல் அதி வேகத்தில் பரவி வருவதாக அர சாங்கம் தெரிவித்தது. முன்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அது கூறியது. ஆகஸ்ட் மாதத்தி லிருந்து பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உலகின் ஆகப்பெரிய பன்றி இறைச்சி உற்பத்தி நாடான சீனாவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

போயிங் நிறுவனத்தை எதிர்நோக்கும் கேள்விகள்

வா‌ஷிங்டன்: இந்தோனீசியாவில் சென்ற மாதம் நிகழ்ந்த ‘லயன் ஏர்’ விமான விபத்தின் தொடர்பில் போயிங் நிறுவனம் பல்வேறு கேள்விகளை எதிர்நோக்கி வருகிறது. விபத்துக்குள்ளான விமானத்தை நிறுத்துவதற்கு எதிரான முறையில் உள்ள மாற்றங்கள் குறித்து ‘போயிங்’ பதில் அளிக்க தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுவே விமான விபத்துக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படு கிறது. அக்டோபர் 29ஆம் தேதி ‘லயன் ஏர்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘போயிங் 737-மேக்ஸ்’ ரக விமானம் ஜாவா கடலில் நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 189 பேரும் மாண்டனர்.

கலிஃபோர்னியாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ

கடந்த ஒரு வாரமாக கலிஃபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ என்றும் இல்லாத அளவுக்கு பேரழிவையும் பெரும் நாசத்தையும் ஏற்படுத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ள நிலையில் சுமார் 7,000 வீடுகளும் இதர கட்டடங்களும் வாகனங்களும் தீயில் எரிந்து சாம்பலானதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். காட்டுத் தீ சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பேரடைஸ் நகரம் காட்டுத் தீ பரவுவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் மட்டும் 200 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

மகாதீர்: பிரச்சினைகளை சமாளிக்க புதிய யோசனைகள் தேவை

மலேசியாவில் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சர்ச்சைக்குரிய புதிய யோசனை கள் குறிப்பிடப்பட்டிருந்த போதி லும் நிதி, மேம்பாடு, நிர்வாகம் தொடர்பிலான பிரச்சினைகளை சமாளிக்க அரசாங்கத்திற்கு புதிய யோசனைகள் தேவைப் படுகின்றன என்று மலேசியப் பிரதமர் டாகடர் மகாதீர் முகம்மது கூறினார். சிங்கப்பூரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

நஜிப் மனைவி ரோஸ்மாவிடம் எம்ஏசிசி அதிகாரிகள் விசாரணை

பெட்டாலிங் ஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். சரவாக் மாநில கிராமப்புற பள்ளிகளுக்கான பல மில்லியன் டாலர் மதிப்புடைய திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டதாகக் கூறப் பட்டது. வாக்குமூலம் அளிக்க அவர் நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை யகத்திற்கு வந்திருந்தார்.

பிரிட்டன் வெளியேற்றம் குறித்த உடன்பாடு: பிரதமர் தெரேசா மே எதிர்நோக்கும் சிக்கல்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பிரிட்டன் ஓர் உடன்பாடு செய்து கொண் டுள்ளது. அந்த நகல் உடன்பாட்டிற்கு பிரிட்டிஷ் அமைச்சரவையில் போதிய ஆதரவு இருந்தால் மட்டுமே அந்த உடன்பாடு நடைமுறைக்கு வரும். ஐரோப்பிய ஒன்றிய அமைப்பி லிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் திருவாட்டி மே சிரமப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் உடன்பாடு கண்டுள்ளார். ஆனால் இந்த உடன்பாட்டிற்கு பிரிட்டனில் எதிர்ப்பு இருந்து வருகிறது.

கலிஃபோர்னியாவில் தீ: 42 பேர் பலி

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பரவும் காட்டுத் தீக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்றும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கலிஃபோர்னியாவின் பேரடைஸ் நகரை காட்டுத் தீ சூழ்ந்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நகரம் மற்றும் இதன் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 200 பேரைக் காணவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

மலேசியா: 33 குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம்

கோலாலம்பூர்: மலேசியாவில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு உட்பட எட்டு சட்டங்களின் கீழ் 33 குற்றங்களுக்கு விதிக்கப்பட்டுவந்த மரண தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவை ஒருமனதாக தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் அலுவலகத் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் கூறியுள்ளார். குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு கொலைக் குற்றத்திற்காக உள்ள சட்டப் பிரிவாகும்.

நஜிப் மனைவி, உதவியாளர் மீது நாளை புதிய குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி ரோஸ்மா மீதும் அவரது முன்னாள் உதவியாளர் ரிஸால் மன்சூர் மீதும் நாளை புதிதாக 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட விருப்பதாக தகவல்கள் கூறு கின்றன. சரவாக் மாநிலத்தில் உள்ள கிராமப்புற பள்ளிகளுக்கான 1.25 பில்லியன் ரிங்கிட் (S$412 மில்லியன்) மதிப்பிலான சூரிய சக்தி ஹைப்ரிட் திட்டம் தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிகிறது.

1எம்டிபி பணத்தை திருப்பித் தர கோல்ட்மேன் வங்கிக்கு நெருக்குதல்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி விவகாரத்தில் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கிக்கு சம்பந்தம் உண்டு என்பதை அந்த வங்கிக் குழுமம் ஒப்புக்கொண்டுள்ள வேளையில் அந்த வங்கி ஊதியமாகப் பெற்றுக்கொண்ட தொகையைத் திருப்பித் தருவதே நியாயம் என்று மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அந்தப் பணத்தை திரும்பப் பெற அந்த வங்கிக்கு எதிராக நெருக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று திரு அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அந்த வங்கியிடமிருந்து மலேசிய அரசாங்கம் இழப்பீடு கோர வேண்டும் என்றும் திரு அன்வார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Pages