உல‌க‌ம்

போர்ட் மொரேஸ்பி: பாப்புவா நியூ கினியின் வடக்குப் பகுதியில் மக்கள் தொகை அதிகம் இல்லாத பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் மாதம் 24ஆம் தேதி) நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியின் புவிசார் அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
ஜெருசலம்: பாலஸ்தீனத்தின் பிரதான அல்-ஷிஃபா மருத்துவமனை மீது கடந்த சில நாள்களாக தாங்கள் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை170 காஸா துப்பாக்கிக்காரர்கள் மாண்டு விட்டனர் என்று இஸ்‌ரேலிய ராணுவம் சனிக்கிழமை (மார்ச் 23) தெரிவித்தது.
கோலாலம்பூர்: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், பல்லின மலேசிய மக்களின் ஒற்றுமையே தமக்கு வழங்கப்படும் அர்த்தமுள்ள பிறந்தநாள் பரிசாக விளங்கும் என்று கூறியுள்ளார்.
ஹாங்காங்: ஹாங்காங்கின் புதிய பாதுகாப்புச் சட்டம் மார்ச் 23 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தச் சட்டம் சீன நிர்வாகத்தின் கீழ் வரும் அந்நகரத்தின் சுதந்திரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் என்றும் அனைத்துலக நிதி மையம் என்ற அதன் அந்தஸ்துக்கு கேடாக அமையும் என்றும் அனைத்துலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் டாமான்சராவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் பாதுகாவலராக வேலைபார்க்கிறார் நேப்பாளியான ஷெர்பா தவா, 36.