You are here

உல‌க‌ம்

சிறையில் வைக்கப்பட்ட செய்தியாளர்கள்; மியன்மாரில் தொடரும் ஆர்ப்பாட்டம்

யங்கூன்: ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு செய்தியார்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக குறைந்தது 100 இளையர்களும் செய்தியாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிருபர்கள் 32 வயது வா லோனும் 28 வயது கியாச் சோய் ஊவும், அந்நாட்டின் அதிகாரபூர்வ சட்டத்தின்படி குற்றவாளிகள் என அதன் நீதிமன்றம் உறுதி செய்தது.

பணக்கார நாடுகளில் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஊதிய உயர்வு

உலகின் ஆக பணக்கார நாடு களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்குச் சம்பள உயர்வு கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப் பிய ஒன்றியம் ஆகியவற்றில் வேலையின்மை குறைந்து வரு வதால், ஊழியர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் நிறுவனங்கள் வேறு வழியின்றி சம்பளங்களை உயர்த்தி வருவதாகவும் இவ் வாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தச் சம்பள உயர்வு 2.5% உயர்ந்திருப்பதாகவும் ‘ஜேபி மார்கன் என்ட் சேஸ்’ நிதி முத லீட்டு வங்கி தெரிவித்தது. 2009ஆம் ஆண்டில் நடந்த அனைத்துலக பொருளியல் தேக் கம் நடந்தது முதல் இன்று வரை இவ்விகிதம் ஆக அதிகமாக இருப்பதாக இவ்வங்கி கூறியது.

இரு கொரியாக்களின் இணைப்பை அதிகம் விரும்பும் வடகொரியர்கள்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் தென்கொரிய தலைவர் மூன் ஜேயினும் இன்று சந்திக் கவுள்ள வேளையில், இரு கொரி யாக்கள் இணைவது குறித்த யோசனையை வடகொரியா மீண் டும் முன்வைத்துள்ளது. ஆயினும், 1940களில் இரண்டுபட்ட இந்நா டுகள் சேர்வது குறித்து தென் கொரியர்களின் ஆதரவு வலுவாக இல்லை என நிபுணர்கள் கருது கின்றனர்.

மகாதீர்: அதிக நாடாளுமன்ற இடங்கள் தேவை

தோக்கியோ: சபா, சராவாக் ஆகிய மாநிலங்களை மலேசிய தீபகற் பத்திற்கு இணை யான மாநிலங் களாக அங்கீ கரிக்கும் அரச மைப்புச் சட்டத் திருத்தங்களைச் செய்வதற்கு பக்கத் தான் ஹராப் பான் கூட்டணிக்கு நாடாளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் தேவைப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்தார். இந்தப் பெரும்பான்மை கிடைப் பதற்கான முயற்சி மேற் கொள் ளப்பட்டு வருவதால் பக்கத்தான் கூட்டணி தலைமையிலான அர சாங்கம், இந்தச் சட்ட திருத் தங்களைச் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் கூறினார். தற்போது, 222 நாடாளுமன்ற இடங்களில் பக்கத்தான் ஹரப் பானுக்கு 125 இடங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

‘நஜிப் வெளியிட்ட நன்கொடை கடிதங்களில் சவூதி இளவரசரின் கையெழுத்து இல்லை’

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், தமது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பல பில்லியன் ரிங்கிட் பணம் சவூதி அரேபிய இளவரசர் தமக்கு நன் கொடையாக அளித்தவை எனக் கூறி வருகிறார். அதற்குச் சான்றாக, சவூதி இளவரசர் எழுதியதாகக் கூறி சில கடிதங்களைக் கடந்த வாரம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு நஜிப் பகிர்ந்துகொண்டார். இந்நிலையில், அந்தக் கடிதங் களில் சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் அல்-=சாட் கையெழுத்திட வில்லை என்று ‘தி எட்ஜ் வீக்லி’ செய்தி வெளியிட்டுள்ளது.

பிலிப்பீன்சில் பலரைக் கொன்ற சூறாவளி ஹாங்காங்கை புரட்டி, தென்சீனாவை பதம்பார்த்தது

இந்த ஆண்டிலேயே ஆக அதிக அசுரபலம் வாய்ந்த சூறாவளி என்று வர்ணிக்கப்படும் ‘மங்கூட்’ நேற்று பிலிப்பீன்ஸ் நாட்டை ஒரு கை பார்த்துவிட்டது. அந்த நாட்டின் வடகோடியில் இருக்கும் லூசோன் என்ற தீவை அந்தச் சூறாவளி புரட்டிப்போட்டு குறைந்தபட்சம் 30 பேரைக் கொன்றுவிட்டது. ஏராளமான மரங்கள் சாய்ந்து விட்டன. வீடுகளின் கூரைகள் பறந்துவிட்டன. பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. பண்ணை களிலும் வயல்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்கள்.

பிலிப்பீன்ஸ் புயலுக்கு இரு பெண்கள் பலி

மங்கூட் புயல் கடும் சீற்றமடைந்து வடக்கு பிலிப்பீன்ஸைத் தாக்கி யதைத் தொடர்ந்து நூற்றுக்கணக் கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, ஹாங்காங்=ஜப்பான் விமானச் சேவை பெரிதாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கேத்தே பசிபிக் விமான நிறு வனம் 400 விமானச் சேவைகளை அடுத்த மூன்று நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. கேத்தே டிராகன் நிறுவனமும் தனது சேவைகளை நிறுத்திவைத்துள்ளது. இதற்கிடையே, இந்தப் புய லுக்கு இரு பெண்கள் பலியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித் தனர். பேங்கியோ நகரில் புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாண்ட அவ்விரு பெண்களின் சடலத்தை போலிசார் கண்டதாக வும் அவர்கள் கூறினர்.

இந்தோனீசியாவின் லொம்போக்கில் மலேரியா

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லெம்போக் தீவில் அண்மையில் பலமுறை நிலநடுக்கங்கள் ற்பட்டன. இதனால் அந்தத் தீவு பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது கொசுக்களால் பரவும் மலேரியா நோயால் அத்தீவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தீவில் சுகாதார நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 128 பேர் மலேசியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர் என்று மேற்கு லொம்போக் சுகாதார வாரியத்தின் தலைவர் திரு ரஹ்மான் சானான் புத்ரா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அதிக அளவில் மலேரியா நோய் பரவி வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

ஃபுளோரென்ஸ் சூறாவளியால் ஐவர் மரணம்

வில்மிங்டன்: ஃளோரென்ஸ் சூறாவளியால் அமெரிக்காவின் கரோலினா கடலோரப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வடகரோலினாவில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் விழுந்தததால் பெண் ஒருவரும் அவரது குழந்தையும் மாண்டனர். காயமுற்ற அந்தப் பெண்ணின் கணவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சூறாவளி காரணமாக கரோலினாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மகாதீர்: போட்டியிட எடுத்த முடிவை ஆதரிக்கிறேன்

பெட்டாலிங் ஜெயா: போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிட திரு அன்வார் இப்ராஹிம் எடுத்துள்ள முடிவை ஆதரிப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட திரு அன்வாருக்கு உரிமை இருப்ப தாகவும் அதில் தாம் தலை யிடப்போவதில்லை என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். “அன்வார் ஹாங்காங்கிலிருந்து என்னைத் தொடர்புகொண்டார். இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் என்னிடம் கூறினார். “பொதுவாக இடைத்தேர்தல் களுக்கான பிரசாரங்களில் நான் ஈடுபடுவதில்லை என்று அவரிடம் தெரிவித்தேன்.

Pages