உல‌க‌ம்

மணிலா: பள்ளம் தோண்டி கடைத்தொகுதிக்குள் நுழைந்து ஏறக்குறைய $1 மில்லியன் பெறுமான நகைகளையும் ரொக்கத்தையும் திருடிய சம்பவம் பிலிப்பீன்ஸில் நிகழ்ந்து உள்ளது.
சோல்:  தென்கொரியாவின் எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே-மயுங், ஜனவரி 2ஆம் தேதி தெற்குத் துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றபோது கத்திக்குத்துக்கு ஆளானார்.
தைப்பே: தைவான் நாட்டு வான்வெளியில் மூன்று சீன பலூன்கள் காணப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை  கூறியது. இதுபோன்று, சென்ற மாதமும் இத்தகைய பலூன்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
சிட்னி: பணவீக்கம் உயர்ந்துள்ளதால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஆஸ்திரேலியக் குடும்பங்களுக்கு ஆதரவாக வாழ்க்கைச் செலவினம் தொடர்பான புதிய நிவாரணத் திட்டங்களைத் தமது மத்திய இடதுசாரி அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்துள்ளார்.
தோக்கியோ: அண்மையில் ஜப்பானைப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று 62ஆக அதிகரித்தது.