You are here

உல‌க‌ம்

737 மேக்ஸ் விமானங்கள் பற்றி போயிங் பாதுகாப்பு எச்சரிக்கை

ஜகார்த்தா: இந்தோனீசிய கடல் பகுதியில் சென்ற வாரம் லயன் ஏர் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங் கியதை அடுத்து அந்த ரக விமானங்களை இயக்கும் நிறு வனங்களுக்கு போயிங் நிறுவனம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்க உள்ளது. விமானத்தின் கண்காணிப்புக் கருவியில் கோளாறு இருந்தால் அந்த விமானம் விழுந்து நொறுங் கக்கூடிய ஆபத்து இருப்பதால் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்காக புதிய 737 மேக்ஸ் ரக விமானங்களை சேவையில் ஈடுபடுத்தும் நிறு வனங்களுக்கு போயிங் எச்சரிக்கை கடிதம் அனுப்ப உள்ளது. இந்த விஷயம் பற்றி நன்கு அறிந்த ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

ஹாங்காங் போலிசாரை கத்தியால் மிரட்டிய நபர் துப்பாக்கிச் சூட்டில் காயம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள சுரங்க ரயில் நிலையத் தில் போலிஸ் அதிகாரிகளை கத்தியால் மிரட்டிய நபரை போலிசார் சுட்டதில் அவர் காயம் அடைந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஷாம் ‌ஷுய் போ ரயில் நிலையத்தில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்ட போலிசார், சந்தேக நபர் ஒருவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த நபர் அவரது பையில் வைத்திருந்த 15 செ.மீ. நீளமுள்ள கத்தியை எடுத்து போலிஸ் அதிகாரிகளை மிரட் டியதாக அந்த அதிகாரி கூறி னார். போலிசார் சுட்டதில் காயமுற்ற அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அமெரிக்க இடைக்கால தேர்தல்: டிரம்ப்புக்கு பின்னடைவு

அமெரிக்காவில் அணுக்கமாகக் கவனிக்கப்பட்டு வந்த இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி, பிரதி நிதிகள் சபையைத் தனது கட்டுப்- பாட்டுக்குள் கொண்டு வந்து உள்ளது. இதனால் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றி உள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி, திரு டிரம்ப்பின் முயற்சி- களை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.

ராஜபக்சேவுக்கு தமிழ் உறுப்பினர்கள் ஆதரவு மறுப்பு

மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதர வில்லை என்ற முடிவில் எந்த மாற்ற மும் இல்லை என்று இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை அதிபர் சிறிசேனாவின் அழைப்பை ஏற்று 6 எம்பிக்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசனும் 15 எம்பிக்களுடன் தேசிய தமிழ் கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனும் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாம் எடுத்துள்ள முடிவுகளுக்கு கூட்டமைப்பின- ருக்கு சிறிசேன விளக்கம் அளித்து உள்ளார்.

பாகிஸ்தான்: வங்கிக் கணக்கு ஊடுருவல், பணம் களவாடல்

பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகள் கடந்த அக்டோபர் மாதத்தில் ஊடுருவப்பட்டு ஏராளமான பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தானிய அர- சாங்க அதிகா ரிகள் அதிர்ச்சி தகவலை வெளி யிட்டுள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்பின் இணையக் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ள தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்டோபர் 27, 28ஆம் தேதி- களில் 12 வங்கிகளைச் சேர்ந்த கிட்டத் தட்ட 8,000 வாடிக்கையாளர் களின் கணக்குகள் ஊடுருவப்- பட்டுப் பணம் சூறையாடப்பட்டதாக அதி காரிகள் கூறினர்.

உலகத் தரம் வாய்ந்த வர்த்தக சூழல்: சீனா

ஷாங்காய்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னைப் பேணித்தனமான வர்த்தக நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். இதனை கடுமையாகச் சாடிய சீன அதிபர் ஸி ஜின்பிங், இறக்குமதி வரிகளை மேலும் குறைத்து தம்முடைய நாட்டின் சந்தைகளைத் திறந்துவிடப் போவதாக அறிவித்தார். “உலகத் தரம் வாய்ந்த வர்த்தக சூழலை உருவாக்குவோம்,” என்றும் அதிபர் ஸி அறைகூவல் விடுத்தார்.

மலேசிய டாக்சி ஓட்டுநர்கள்: போராட்டத்தில் குதிப்போம்

கோலாலம்பூர்: எங்களை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சந்திக்க வேண்டும், இல்லையெனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் எச்சரித்துள்ளனர். “பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து டாக்சி ஓட்டுநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பற்றி விவாதிக்க அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் இன்று வரை பதில் இல்லை,” என்று ‘பிக்புளு’ டாக்சி நிறுவனத்தின் இயக்குநர் ஷம்சுபாஹ்ரின் இஸ்மாயில் கூறினார்.

‘லயன் ஏர்’ விபத்து; விமானத்தின் வலுவான பாகங்களும் உடைந்து சிதறின

ஜகார்த்தா: ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய ‘லயன் ஏர்’ விமானத்தின் மிகவும் உறுதியான பாகங்கள்கூட உடைந்து சிதறியுள் ளன என்று இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தெரிவித்தது. அக்டோபர் 29ஆம் தேதி ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங்கை நோக்கி பறந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் இறந்தனர். “கடல் மட்டத்தின் மீது விமானம் அதிவேகத்தில் மோதியதை விமானத்தின் உடைந்த பாகங்கள் காட்டுகின்றன,” என்று இந்தோனீசிய தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் சோர்ஜான்டோ ஜாஜோனோ குறிப்பிட்டார்.

விமான விபத்து: தேடும் மணி மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு

ஜகார்த்தா: சென்ற வாரம் இந்தோனீசிய கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் உதிரிப் பாகங்களை மீட்புக் குழுவினர் மீட்டு வரும் வேளையில் தேடும் பணி மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. விமான விபத்தில் இறந்தவர் களின் எஞ்சிய உடற்பாகங்களை மீட்கவும் இரண்டாவது கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கவும் தேடுதல் பணியை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க தாங்கள் தீர்மானித்ததாக இந் தோனீசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் முகமட் சயாவுஜி கூறினார்.

வடகொரியா: அணுவாயுதங்களை தயாரிக்கத் தொடங்குவோம்

சோல்: வடகொரியா மீது அமெரிக்கா விதித்த பொருளியல் தடைகளை அகற்றவில்லை என்றால் அணுவாயுதங்கள் தயாரிக்க வகை செய்யும் கொள்கையைப் பின்பற்றுவது குறித்து பரிசீலிக்கப்போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியா பல ஆண்டு களாக அணுவாயுதம் தயாரிக்க வகை செய்யும் கொள்கையை பின்பற்றி வருகிறது.

Pages