You are here

உல‌க‌ம்

அன்வார்: நஜிப்பிடமிருந்து 9.5 மி. ரிங்கிட் அரசு வழக்கறிஞருக்குக் கைமாறியது

கடந்த 2013ஆம் ஆண்டிற்கும் 2014ஆம் ஆண்டிற்கும் இடையில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து வழக்கறி ஞர் முகம்மது ஷஃபீ அப்துல்லா 9.15 மில்லியன் ரிங்கிட் (S$3.15 மி.) பணத்தைப் பெற்றுள்ளார் என அந்நாட்டின் தலைமைச் சட்ட அதி காரி அலுவலகம் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து உள்ளது.

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் சவுரப் சௌத்ரி

சாங்வான்: தென்கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் வெற்றியாளர் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 10 மீட் டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சவுரப் சௌவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார். சவுரப் சௌவுத்ரி 245.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். கொரிய வீரர் லிம் ஹாஜின் 243.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா 218 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் வென்ற னர். முன்னதாக நடந்த அணி களுக்கான போட்டியில் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா, அன்மோல் ஜெயின் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

மகாதீர்: குறைந்தபட்ச சம்பளத்தை அதிகமாக உயர்த்த முடியாது

கோலாலம்பூர்: மலேசியாவின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டே தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 1,050 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 1,500 ஆக உயர்த்தப்பட வேண் டும் என்று பலர் வலியுறுத்தி வந்த நிலையில் திரு மகாதீர் 50 ரிங்கிட் மட்டுமே உயர்த்தியுள்ளார். இதை தற்காத்துப் பேசிய திரு மகாதீர், பலர் கேட்டுக்கொண்டது போல குறைந்தபட்ச சம்பளத்தை 1,800 ரிங்கிட்டாகவோ அல்லது 1,500 ரிங்கிட்டாகவோ உயர்த்து வது சாத்தியம் இல்லை என்று அவர் கூறினார்.

ரசாயனத் தாக்குதலுக்கு ஆயத்தமாகும் சிரியா படை

வா‌ஷிங்டன்: சிரியாவில் போராளிகள் வசம் உள்ள இட்லிப் மாநிலத்தைக் கைப்பற்ற கடுமையாகச் சண்டையிட்டு வரும் அரசாங்கப் படை ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் இருப்பதாக சிரியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜிம் ஜெஃப்ரி கூறியுள்ளார். போராளிகள் வசம் உள்ள பகுதியில் அரசாங்கப் படை ரசாயனத் தாக்குதல் நடத்தினால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கவுள்ள டிரம்ப்

வா‌ஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மேலும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25% வரை வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கெனவே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா 20% வரி விதித்துள்ளது. இந்நிலையில் கூடுதல் வரி விதிக்கவிருப்பதாக திரு டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜேம்ஸ் மேட்டிஸ் காபூல் வருகை

காபூல்: அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு திடீர் வருகை புரிந்ததாக தகவல்கள் கூறின. அண்மைய மாதங்களில் காபூலுக்கு அவர் இரண்டாவது முறையாக வருகை புரிந்தார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியையும் புதிய அமெரிக்கத் தளபதியையும் அவர் சந்தித்துப் பேசியதாகவும் தெரிகிறது. காபூலில் தலிபான் குழு தாக்குதலை தீவிரப்படுத்தி யுள்ள நிலையில் அவர் அங்கு வந்துள்ளார்.2

ஜப்பானில் தொடரும் இயற்கை பேரிடர்கள்

தோக்கியோ: ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் ‘ஜெபி’ எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி கடு மையாக தாக்கியதில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பாகவே அந்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹொக் கைடோ தீவில் கடல்மட்டத்திற்கு கீழே 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.7 என்று பதி வான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை. சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதி காலை 2.08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஒன்பது பேர் உயிரிழந்ததுடன் குறைந்தது 38 பேர் காணாமல் போனதாக தக வல்கள் வெளியாகின.

ஜோகூர் பாருவில் மின்தடை; பல கட்டடங்கள் இருளில் மூழ்கின

மலேசியாவின் ஜோகூர் பாருவின் நகர்ப் பகுதியிலும் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் நேற்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் பெரும் மின்தடை ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்துப்போயினர். மின்சாரம் நேற்று மாலை 5 மணி வரை திரும்ப வில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடைத் தொகுதிகள் உள்ளிட்ட பல கட்டடங்கள் இருளில் மூழ்கியதாகவும் தெரியவந்தது. பல சாலை சந்திப்புகளில் போக்கு வரத்து விளக்குகள் எரியவில்லை. ஜாலான் துன் ரசாக், ஜாலான் ஸ்கூடாய், ஜாலான் லார்கின் போன்ற பெரிய சாலைகள் நெடுகிலும் போக்கு வரத்து விளக்குகள் இல்லாமல் போன தால் தேக்கமும் குழப்பமும் நிலவியது.

இந்தோனீசியா: இரவு 9 மணிக்குமேல் தனியாக வரும் பெண்ணுக்கு உணவளிக்கக்கூடாது

அச்சே: இந்தோனீசியாவில் அச்சே உணவகங்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் தனியாக உணவு உண்ண வரும் பெண்களுக்கு உணவு வழங்கவேண்டாம் என்று இந்தோனீசியாவின் அச்சே மாகாணத்தின் ஒரு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சி

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் மோசமான நிர்வாகத்திலிருந்து அந்நாட்டைக் காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தக வல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக திரு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளை எடுத்து வருகிறார். இதனால் அமெரிக்காவுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற் கெனவே புகார் கூறி வருகிறார்கள். சொந்த கட்சியிலும்கூட இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

Pages