உல‌க‌ம்

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவி, தமது மனைவியை இன்னமும் நேசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள எரிமலையில் ஏறி படமெடுத்துக்கொள்ளத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தபோது சீன சுற்றுப்பயணி ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார்.
அம்மான்: தென்லெபனானில் இஸ்‌ரேலுக்குச் சொந்தமான ஆளில்லா வானூர்தியைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
செப்பாங்: கேலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) குடிநுழைவு அதிகாரிகளாகப் பாசாங்கு செய்து வெளிநாட்டினரை மிரட்டிப் பணம் பறிக்கும் பிரச்சினை தலைதூக்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
நியூயார்க்: லெபனானில் 1975ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் தலைவிரித்தாடியது. அக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கு அமெரிக்கச் செய்தியாளரான டேரி ஆண்டர்சனை இஸ்லாமியப் போராளிகள் பிணைக் கைதியாக வைத்திருந்தனர். அவர் 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.