சிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள் 

- ப. பாலசுப்பிரமணியம், ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் -

உறுதுணை இல்லாமல் உன்னதநிலை அடைந்த அஜே

சிறுவயதில் பெற்றோரை இழந்த அஜே சங்கர், தன் அக்காவுடன் பல பராமரிப்பு இல்லங்களில் வசித்தார். பெற்றோரின் அன்பு இல்லாததும் பல இடங்களில் மாறி மாறி வசிக்க நேர்ந்ததும் அஜேயின் படிப்பைப் பாதித்தது. மனதையும் பாதித்தது.

தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் 132 புள்ளிகள் பெற்ற அஜே, மோன்ட்ஃபர்ட் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற போது, எந்த இலக்கும் இன்றி எதை நோக்கிச் செல்கிறோம் என்ற தெளிவில்லாமல் இருந்தார்.

படிப்பில் ஆர்வமில்லாமல், வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருந்த அஜேக்கு வழிகாட்டியாக வந்தார் அவரின் ஆசிரியர் திரு வின்சன் லோ. அஜேக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, அவரது வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

கணிதம், அறிவியல் பாடங் களில் அஜேக்கு இருந்த திறனை அவருக்கு உணர்த்தினார். அதன்பிறகு அந்தப் பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற்ற அஜே, பொறியிய லாளராக வேண்டும் என்று உறுதிபூண்டார்.

'ஜிசிஇ' 'என்', 'ஓ' நிலை தேர்வுகளில் சிறந்த வகையில் தேர்ச்சி பெற்று தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னணுவியல் துறையில் பட்டயப் படிப்பைத் தொடங்கினார்.

ஒவ்வோர் ஆண்டும் 'நீ ஆன் கொங்சி' உபகாரச் சம்பளத் திற்குத் தகுதிபெறும் அளவுக்கு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று வந்தார் அஜே.

அத்துடன், கல்லூரியைப் பிரதிநிதித்து 'உலக திறன்கள் சிங்கப்பூர் 2018' எனும் வேலை துறை சார்ந்த திறன் போட்டியில் அஜே வெண்கலப் பதக்கம் பெற்றார்.

கல்விப் பயணத்தில் சாதனைப் படிக்கட்டில் ஏறும் அதே நேரத்தில் சமூகத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்ற சிந்தனை அவருள்ளே ஏற்பட்டது.

கல்லூரியின் பொறியியல் துறையின் சமூக சேவை மன்றத் தில் சேர்ந்து தொண்டூழியச் சேவையாற்றினார்.

மேலும், பிலிப்பீன்ஸ் நாட்டி லுள்ள கிராமம் ஒன்றில் சூரிய மின்சக்தித் தகடுகள் தொடர்பான திட்டத்தையும் அஜே வழிநடத் தினார்.

புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள எப்போதும் தயங்காத அஜே, நீச்சல் கற்றுக்கொள்வதற் காக கல்லூரியின் 'டிரயத்தலோன்' எனும் மூவகை விளையாட்டுப் போட்டிக்கான குழுவில் இடம் பெற்றார்.

கடலில் நீந்தும் அளவுக்கு நீச்சலில் தேர்ச்சி பெற்று அதிலும் தன் கால்தடத்தைப் பதித்தார்.

சொந்தமாக பியானோ, கிட்டார் போன்ற இசைக்கருவி களை வாசிக்கப் பழகிய அஜேயின் பொழுதுபோக்கு, காற்பந்து விளையாடுவதும் ஓடுவதும்.

மிகச் சிறந்தநிலைத் தேர்ச்சி யான 3.98 'ஜிபிஏ' மதிப்பீட்டுப் புள்ளிகள் பெற்ற அஜே, பொறியியல் துறை சார்ந்த பட்டப் படிப்பை மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ளார்.

எப்போதும் குறிக்கோளை அடையும்வரை முயற்சியைக் கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் 21 வயது அஜே, பொறியியல் துறையில் பட்டம் பெறுவது தமது அடுத்த இலக்கு எனக் கூறினார்.

சாதகமற்ற சூழலில் வெற்றிநடை போடும் இளம்கதிர்

பெற்றோர் விவாகரத்தான நிலை யில் தாயாரின் சம்பாத்தியத்தில் குடும்பச் சக்கரம் ஓடியது. அப் போது, தன் தாயாருக்கும் அக் காவுக்கும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று உறுதி எடுத்தார் இளம்கதிர்.

விவாகரத்தின்போது வழக்கறி ஞரின் சேவைகளைப் பெற தமது தாயார் சிரமப்பட்டதைக் கண்ட கதிருக்கு தான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற லட்சியம் உருவெடுத்தது.

தங்களுக்கு எளிதில் கிடைக்காத உதவியை மற்றவர் களுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாகப் பதிந்தது.

சிரமங்களும் பிரச்சினைகளும் நிறைந்த குடும்பச் சூழ்நிலையால் மனம் தளர்ந்துவிடாமல் கடின முயற்சி எடுத்துப் படித்தார்.

'ஜிசிஇ' 'ஓ' நிலைத் தேர்வில் ஐந்து பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கதிர், தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியில் சட்டம், நிர்வாகத் துறையில் பட்டயக் கல்வியை மேற்கொண்டார்.

படிக்கும் காலத்தில் தன் தாயாரின் சுமையைக் குறைக்கவும் தன் சொந்த செலவுகளைத் தானே சமாளித்துக்கொள்ளவும் கதிர் இரு பகுதிநேர வேலைகள் செய்து வந்தார்.

மேலும், பலதுறை தொழிற் கல்லூரியின் சட்ட ஆர்வலர்கள் குழுவின் (Law interest group) நடவடிக்கைகளிலும் அவர் ஈடு பட்டார். கிட்டத்தட்ட ஈராண்டு களுக்கு அதன் தலைவராகவும் கதிர் பொறுப்பு வகித்தார்.

"பல்கலைக்கழகக் கல்விக்கு தகுதிபெற, படிப்பில் சிறந்து விளங்கினால் மட்டும் போதாது. வகுப்பறைக்கு அப்பால் நாம் வேறென்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் என்பதும் மிகவும் இன்றியமையாதது ஆகும்," என்று கூறினார் இளம்கதிர்.

3.95 ஜிபிஏ மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் கல்லூரியின் சட்ட, நிர்வாகத் துறையின் சிறந்த மாணவராக சிறந்த நிலையில் தேர்ச்சி பெற்றுள்ள இளகதிருக்கு சிங்கப்பூர் சட்ட பயிலகத் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

"படிக்கும்போது ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிக்கோள் வைத் துக்கொண்டேன். முதல் இரண்டு ஆண்டுகள் நான் 'டைரக்டர்ஸ் லிஸ்ட்' என்ற முக்கிய பட்டியலில் இடம்பெறுவதை என்னுடைய குறிக்கோளாக வைத்துக்கொண் டேன்," என்று கூறினார் இளம்கதிர்.

"எனக்குத் தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று தெரியவந்த போது, நான் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். இதை அடைவதற்காக நான் பட்ட சிரமங்களுக்கும் உழைத்த உழைப்புக்கும் அர்த்தம் கிடைத்ததுபோல் இருந்தது. என் குறிக்கோளை அடைந்ததில் மிக வும் பெருமையாகவும் மகிழ்ச்சி யாகவும் இருந்தது. என் குடும்பத் திற்குப் பெருமை சேர்த்ததில் எனக்குப் பேரானந்தம்," என்றார் இளம்கதிர்.

தேசிய சேவையை முடித்ததும், சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டக் கல்வி பயில விரும்புகிறார் இளம்கதிர்.

"எத்தனை மனக்கஷ்டங்கள் வந்தாலும், அடையவிருக்கும் குறிக்கோளிலிருந்து நம் கவனத்தைச் சிதறவிடக்கூடாது. குறிக்கோளை எவ்வாறு அடை யலாம் என்று தெளிவாக திட்ட மிட்டுக் கடினமாக உழைத்தால் வெற்றி நம்மைத் தேடிவரும்," என்று கூறினார் இளையரான இளம்கதிர்.

தோல்வியிலிருந்து மீண்டு லட்சியப் பயணம் செல்லும் சூர்யா

பட்டயக் கல்வியில் சிறந்த நிலைத் தேர்ச்சியான 4.0 'ஜிபிஏ' மதிப் பீட்டுப் புள்ளிகள் பெற்றிருக் கும் சண்முகம் சூர்யாவுக்கு உயர் நிலைப் பள்ளிக் காலத்தில் படிப் பில் ஈடுபாடோ அக்கறையோ இருந்ததில்லை.

செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையத்தில் பயின்ற சூர்யா, உயர்நிலை மூன்றில் தோல்வி அடைந்து மீண்டும் அதேநிலை மேலும் ஓராண்டு படிக்கும் நிலை ஏற்பட்டது. அந்தத் தோல்வி அவரைச் சிந்திக்க வைத்தது. அச்சமயத்தில் அவர் பள்ளியில் சந்தித்த வழிகாட்டித் தோழர்களின் அறிவுரைகளும் ஊக்கமும் படிப்பில் கவனம் செலுத்த சூர்யாவுக்கு உந்துதல் அளித்தன.

கல்வியின் முக்கியவத் துவத்தை உணர்ந்த சூர்யா, 'ஜிசிஇ' 'ஓ' நிலை தேர்வுகளுக் காக கடுமையாக உழைத்து சிறப்புத் தேர்ச்சியும் பெற்றார்.

இளம் பருவத்திலிருந்தே விமானத் துறையில் ஈடுபாடு இருந்து வந்ததால், தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியின் ஆகாயவெளி பொறியியல் துறை யில் சேர்ந்தார் சூர்யா. ஓய்வு நேரத்தின்போதும் தமது துறை தொடர்பான ஆய்வுகளை மேற் கொள்ளும் அளவுக்கு அதில் ஆழமான ஈடுபாடு காட்டினார் சூர்யா.

விண்வெளி தொடர்பான போட்டிகளிலும் பங்கெடுத்தார்.

தனது பட்டயக் கல்வியின் இரண்டாம் ஆண்டில் ஏழு பேர் கொண்ட குழுவுக்குத் தலைவராக பொறுப்பேற்று, சிங்கப்பூர் விண்வெளி, தொழில்நுட்ப சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிங்கப்பூர் விண்வெளி சவாலில் சூர்யா பங்கெடுத்தார். அந்தக் குழுவின் படைப்புக்குத் தங்க விருது கிடைத்தது.

"இத்துறையில் என் அனுபவத் தையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கடினமாக உழைத்து வந்தேன்," என்றார் அவர்.

சூர்யாவுக்கு விண்வெளித் துறை தொடர்பாக சொந்த நிறு வனத்தைத் தொடங்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை இருந்து வந்தது. அதே சிந்தனையுடன் இருந்த நண்பர் ஜேக்கப்பின் உதவியுடன் கனவு நனவாகியது.

சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை சூர்யாவும் ஜேக்கப்பும் சேர்ந்து நிர்வகித்து வருகின்றனர். விண்வெளிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு சிங்கப்பூருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே சூர்யாவின் லட்சியக் கனவாக உள்ளது.

தேசிய சேவைக்குப் பிறகு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் பயிலவிருக்கும் சூர்யா, எதிர்காலத்தில் தனது நிறுவனத்திலும் மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்தும் பணி யாற்றி, விண்வெளி, பொறியியல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தமது இலக்கு எனக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!