பத்தே நிமிடங்களில் மேடை நாடகம்

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், சிலருக்கு ஒன்று, இரண்டு மணி நேர மேடை நாடகத்தைப் பார்ப் பதற்கு நேரம் இருக்காது. வேறு சிலருக்கோ கவனத்தைச் சிதற விடாமல் நீண்ட நேரமாக நாடகத் தைப் பார்ப்பதற்குச் சிரமமாக இருக்கலாம்.

ஆனால் சொல்ல வேண்டியதை பத்தே நிமிடங்களில் சொல்லிவிட லாம் என்று கூறுகிறார் நாடகக் கதாசிரியர், குறும்பட இயக்குநர் சலீம் ஹாடி.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இத்தகைய 10 நிமிட மேடை நாடகப் படைப்புகள் பிர பலமாகி அவற்றின் தாக்கம் இங்கிலாந்து, இந்தியா, மலேசியா என உலகெங்கும் பரவி வருவதாக அவர் சொன்னார். 

2001ஆம் ஆண்டிலிருந்து உள் ளூர்க் கலைத் துறையில் ஈடுபட்டு வரும் இவர், அடுத்த மாதம் இரு நாட்களுக்கு இதன் தொடர்பில் தமிழில் பயிலரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறார்.

தமிழ் நாடகக் கதாசிரியராக விரும்பும் 18 வயதிற்கும் மேற்பட் டோருக்காக இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது. 

நாடகக் கதை எழுதிய முந்தைய அனுபவம் எதுவும் தேவையில்லை. 

பயிலரங்கில் கலந்துகொள் வோர் பத்து நிமிட மேடை நாடகக் கதை ஒன்றை எழுதும் உத்தி களை இப்பயிலரங்கில் கற்றுக் கொள்வர்.

கதை உருவாக்கத்தில் தொடங்கி வசனங்களை எப்படி எழுதுவது, எத்தகைய கதாபாத் திரங்களை அறிமுகம் செய்வது போன்ற கூறுகள் பயிலரங்கில் ஆராயப்படும்.

பயிலரங்கின் முதல் நாள் அன்று உள்ளூர்ப் பிரபலமான கலை கிரேஸ், வசனங்களை எப் படி எழுதுவது என்பது குறித்துப் பகிர்ந்துகொள்வார்.   

"ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களை இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தாங்களாகவே சொந்தமாக ஒரு நாடகப் படைப்பை உருவாக்க இந்தப் பயிலரங்கு அவர்களைத் தயார்படுத்தும்," என்று தெரிவித்தார் திரு சலீம் ஹாடி.

எதிர்வரும் ஜூன் மாதம் 1, 2 ஆகிய தேதிகளில் எஸ்பிளனேட் அரங்கில் நடக்கவிருக்கும் இந்த இரு நாள் பயிலரங்கு பற்றிய மேல்விவரங்களை அறிய விரும் புவோர் எஸ்பிளனேட் இணையப் பக்கத்தை நாடலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

இலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்

கடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்