கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு

வைதேகி ஆறுமுகம்

இசை, நடனம், அரங்கப் படைப்பு, காட்சிக் கலை போன்ற கலையின் பல பரிமாணங்களை வெவ்வேறு உணர்ச்சிகளின் ஊடாக ஒன்றி ணைத்தது ‘பிளே 2019’.

பல்வேறு இனங்களிலிருந்தும்  துறைகளிலிருந்தும் தன்னிச்சை யாக  வளர்ந்துவரும் கலைஞர் களை அங்கீகரிக்கும் சமூகத் திட் டமாக ‘பிளே’ எனும் நிகழ்ச்சி இம்மாதம் 4ஆம் தேதியன்று ‘டிராமா சென்டர் பிளாக் பாக்ஸ்’இல் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்குத் தேசிய இளையர் மன்றத்தின் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ உதவித் தொகையும் ‘டோட்’ வாரிய கலைகள் நிதியமும் ஆதரவளித்தன.

பலதரப்பட்ட அங்கங்களில் ஒன்றாக மகிழ்ச்சி, கவலை, கோபம் போன்ற உணர்வுகளை உடல், மூச்சு போன்றவற்றின் மூலம் இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமான ‘உணர்வுகளும் அசைவுகளும்’ வெளிப்படுத்தியது.

உணர்ச்சி வெளிப்பாட்டின் தொடர்ச்சியாக கோபம், குற்ற உணர்வு, மன்னிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘பிளேயிங் மைன்ட் கேம்ஸ்’ என்ற அங்கம் படைக்கப்பட்டது.

இரு சகோதரிகளில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் போது தான் எடுத்த முடிவை எவ்வாறு நியாயப்படுத்த முயற்சி செய்கிறார் என்பதை அந்த அங்கம் ஒரு கதையாக வெளிப் படுத்தியது.

ஒருங்கிணைந்த சிந்தனையை கலைஞர்களிடம் ஊக்குவிக்கும் நோக்கத்தை  இத்திட்டம்  கொண்டுள்ளது. 

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்ற கலைகளைப் புரிந்துசெயல்பட உதவியாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

நிறங்களைப் பயன்படுத்திக் கருத்துரு அமைத் தல், கர்நாடக, மேற் கத்திய இசை அமைப்பில் குரல் பயிற்சி,   இணைந்து செயல்படும் முறை கள் போன்றவற்றின் அடிப்படையில் மூன்று பயிலரங்கு கள் நடத்தப்பட்டன.

உள்ளூர் கலைஞர்கள் தங்களது பணிகள், ஆக்கபூர்வ மான நடைமுறை போன்றவற்றைப் பகிர்ந்து தங்களுக்கான ஆதரவை வளர்த்துக்கொள்வதற்கு உதவி யாக இந்த நிகழ்ச்சி அமைந் திருந்தது.

வளர்ந்து வரும் கலைஞர்கள் கற்றுக்கொள் வதற்கும் பயிற்சி பெறுவதற்கும் ஏற்புடைய ஒரு தளம் தேவை என்று ‘பிளே’ ஏற்பாட்டுக் குழு நம் பியது.

அந்த வகையில் இளைய சிங்கப் பூரர்களின் பாரம்பரியச் சிந்தனைகளையும் உத்திகளையும் அவர்களது கலை வெளிப்பாட்டின் மூலம் இந்த நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்தது.

ஒவ்வொரு படைப்பையும் தனிப் பட்ட வகையில் மதிப்பிட்ட பின் னர், மற்றவர்களின் படைப்பு களுக்கு எவ்வாறு பதில் தருவார் கள் என்பதைக் கலைஞர்களைச் சிந்திக்க வைத்ததாக இந்நிகழ்ச் சியின் கலை இயக்குநரான திருமதி துர்கா தெரிவித்தார்.

பலதரப்பட்ட கலை அங்கங்களைத் தொடர்புபடுத்திக் கோர்த்து ஒரே மேடையில் வெளிப்படுத்திய ‘பிளே’ நிகழ்ச்சி. கூடுதல் செய்திகள்: எஸ்.வெங்கடேஷ்வரன், படங்கள்: லிஜேஷ் கருணாகரன்
பலதரப்பட்ட கலை அங்கங்களைத் தொடர்புபடுத்திக் கோர்த்து ஒரே மேடையில் வெளிப்படுத்திய ‘பிளே’ நிகழ்ச்சி. கூடுதல் செய்திகள்: எஸ்.வெங்கடேஷ்வரன், படங்கள்: லிஜேஷ் கருணாகரன்

நடனமும் இசையும் இணைந்த படைப்பான ‘சோஜூடாக்ஸ்’ எனும் அங்கத்தில் தமது நடனத் திறனை வெளிப்படுத்தினார் ஆசிரி யராகப் பணிபுரியும் 25 வயது குமாரி ரூபலாவண்யா.

இவர் 19 ஆண்டுகளாக நடன மணியாக இருந்து வருகிறார். 

“ஆண்கள் வலிமையோடு இருக்கவேண்டும். எந்தத் தருணத்திலும் நிலைகுலைந்து போய்விடக் கூடாது  என்பது பொதுவான கருத்து. ஆனால், ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு, அவர்களும் பல சவால்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் உடைந்து போகும் தருணங் கள்  உண்டு.  எல்லா நேரத்திலும் அவர்களால் வலிமையோடு இருக்க முடியாது என்பதை முன் வைத்தது எனது அங்கம்,”  என் றார் இவ்வங்கத்தின் அமைப்பாளர் ரூபலாவண்யா. 

பல இனங் களைச் சேர்ந்த கலைஞர்களைச் சந்திக்கவும் அவர்களுடன் தம்முடைய கலை அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளித்ததாகவும் கூறினார் அவர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

இலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்

கடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்