பண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்

இயல், இசை நாடகம், விளையாட்டு எனப் பற்பல வடிவங்களில் தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் இளையர்கள் அனுபவித்து உணர வாய்ப்பளித்தது இவ்வாண்டின் தமிழ்மொழி பண்பாட்டு முகாம்.

புத்தகத்தில் மட்டுமே இத்தக வல்களைப் படித்து வந்த மாணவர் களுக்கு நேரடி அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் இம்முகாம் அமைந்திருந்தது.

சிலம்பம், நடிப்போம்! தீர்வு காண்போம்!, இதழியல், பறை, அறிவியல் தமிழ், இசையோடு கவிதை, திரைத்தமிழ், தமிழும் தகவல் தொழில்நுட்பமும் ஆகிய எட்டு நடவடிக்கைகள் மாணவர் களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன. இவை மூன்று வெவ்வேறு அமர் வுகளில் நடத்தப்பட்டன.

உயர்தமிழ் பயிலும் உயர்நிலை ஒன்று மாணவர்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு இந்த முகாம் சென்ற மாதம் 25ஆம் தேதியன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தமிழ்மொழி, பண்பாடு ஆகிய வற்றின் மீதுள்ள பற்றை இளையர் களிடையே ஊக்குவிப்பதற்காகவும் படைப்பாக்கத் திறன், நுண்திறன் ஆகியவற்றை வளர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட இந்த முகாமில் 15 பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 மாணவர்கள் கலந்துகொண் டனர். பல துறைகளைச் சார்ந்த பயிற் றுவிப்பாளர்கள் நடத்திய நடவடிக் கைகளை ஆசிரியர்கள், பெற்றோர், தொண்டூழியர்கள் ஆகியோரும் வழிநடத்த உதவினர். 

இம்முகாமில் முதன்முறையாக சிலம்பம் கற்றுக்கொண்ட சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மாணவி கற்பகம் இராமநாதன், பலமுறை சிலம்பாட்டக் கம்பைத் தவறிக் கீழே போட்டபோதும் இறுதியில் கம்பைச் சுழற்றும் அடிப்படை உத் திகளைக் கற்றுகொண்டதாகப் பகிர்ந்துகொண்டார்.

“நம் பாரம்பரிய விளையாட்டைப் பற்றி தமிழ் புத்தகங்களில் படித் திருந்தாலும் அதன் வரலாற்றைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள வும் விளையாட்டைக் கைப்படப் பழகவும் இந்த முகாம் வாய்ப் பளித்தது,” என்றார் 13 வயது மாணவி கற்பகம்.

திரைத்தமிழ், சிலம்பம், தமிழும் தகவல் தொழில்நுட்பமும் ஆகிய மூன்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட தி. அபிராம், தமிழும் தகவல் தொழில்நுட்பமும் என்ற நட வடிக்கை அவருக்கு ஒரு வித்தி யாசமான அனுபவத்தை அளித் ததாக கூறினார்.

தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ்மொழி கற்றலை சுவாரசியப் படுத்தும் முயற்சியில் இந்த நட வடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களுக்குத் தமிழில் தட் டச்சு செய்யும் ஒரு மணி நேரப் பயிற்சியை வழங்கியது.

“தற்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல பாடங்கள் தயாரிக் கப்படுகின்றன. அதைத் தான் மாணவர்களும் விரும்புகிறார்கள். அந்த வகையில் தட்டச்சு வழி தமிழ் கட்டுரைகளையும் மின்னஞ் சல்களையும் படைப்பதன் மூலம் நான் தமிழ்மொழியைத் தொடர்ந்து கற்க உற்சாகம் அடைகிறேன்,” என்றார் செயின்ட் ஜோசஃப் கல்வி நிலைய மாணவன் அபிராம்.

தமிழ்மொழி மூலம் மாணவர்க ளின் 21ஆம் நூற்றாண்டுத் திறன் களை மேம்படுத்த தமிழ்மொழி பண்பாட்டு பெரிதும் உதவி வருகிறது.

 

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஏற்பாட்டில் நடந்த நடவடிக்கைகளில் எல்லா மாணவர்களும் மூன்று நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். மாணவர் ஒருவர் பறை அடித்துப் பயிற்சி செய்கிறார். தமிழ்மொழி பண்பாட்டு முகாம் இனிவரும் ஆண்டுகளில் மேலும் பல வித்தியாசமான பரிமாணங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று இம்முகாமின்  ஒருங்கிணைப்பாளரும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தின் பாடத் தலைவருமான திருமதி சுமதி சேகர் தெரிவித்தார். படம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்  

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

இலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்

கடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்